பிரதமர் மோடிக்கு அல்கய்தா பயங்கரவாத அமைப்பு கொலைமிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

யுடியூப் இணைய தளத்தில் வெளியான ஒரு வீடியோவில், பயங்கரவாதி ஒருவன் பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளான்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தில்லியைவிட்டு வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது 5 முதல் 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்கவும், பிரதமர் மோடி செல்லும் வழித் தடங்களில் கண்காணிப்பை இரட்டிப்பாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply