அடுத்த மக்களவை தேர்தலுக்குள், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். .

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில், மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் சனிக் கிழமை கூறியதாவது:

கிரண் பேடி, பாஜகவில் இணைந்துள்ளதை தில்லிமக்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களின் மக்களும் வரவேற்றுள்ளனர். தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் கிரண் பேடியை பாஜக.,வின் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து கட்சிமேலிடம் முடிவுசெய்யும். அங்கு பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, நிலையான ஆட்சியை அமைக்கும்.

நாட்டுமக்கள் பாஜக ஆட்சிக்கு அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். அதனடிப்படையில், 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குள், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும்.

நரேந்திரமோடி தலைமையிலான கடந்த 236 நாள்கள் ஆட்சியில், துறைவாரியாக எண்ணற்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தியது, பாஜக அரசின் மிகப்பெரிய சாதனையாகும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பின் மூலம் மக்கள் பயனடைந் துள்ளனர்.

பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை உயர்த்துவது தேவையான நடவடிக்கையாகும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகின்றன. இதற்கு, நடந்துமுடிந்த நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் அந்த கட்சிகளின் செயல்பாடுகளே சிறந்த உதாரணம் என்று பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

Leave a Reply