நேதாஜி குடும்பத்தினர் 50 பேரை அக்டோபர் மாதம் சந்திக்க இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தனது வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், நேதாஜி குறித்து மத்திய அரசிடம் உள்ள ரகசிய ஆவணங்களை வெளியிடுவது குறித்த எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்ததோடு 64 பக்க ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடந்த 8 நாட்களில் மட்டும் 7 முறை நேதாஜி குடும்பத்தினருக்கு அழைப்புவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நேதாஜி குடும்பத்தினரை அடுத்த மாதம் சந்தித்துபேச உள்ளார். அந்த சந்திப்பின்போது, நேதாஜி குடும்பத்தினர் கேட்கவிரும்பும் கேள்விகள், என்னென்ன விஷயங்கள் குறித்து பிரதமர் கூறவேண்டும் என்று விரும்புகின்றனர் என்பதுபோன்று பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் வானொலியில் மாதந்தோறும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி நேற்று தனது 12வது உரையை நிகழ்த்தினார் அப்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரை சந்தித்து பேச உள்ளது பற்றி தெரிவித்தார்.

Leave a Reply