50 வருடங்களாக காங்கிரஸ் அரசு ராஜஸ்தானை படுகுழியில் தள்ளி விட்டது கடந்த 50 வருடங்களாக காங்கிரஸ் அரசு ராஜஸ்தானை படுகுழியில் தள்ளி விட்டது என்று ராஜஸ்தான் மாநில பாஜக ., தலைவர் வசுந்தரா ராஜே குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது : கடந்த 15 வருடங்களாக நரேந்திரமோடி குஜராத்தை வளர்ச்சிபாதைக்கு கொண்டு சென்றுள்ளார்; இது இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கேதெரியும்; கடந்த பத்து வருடங்களில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவானும், சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங்கும் அவர்களது மாநிங்களை மாற்றியமைத்துள்ளனர்; ஆனால் கடந்த 50 வருடங்களாக ஆட்சிசெய்யும் காங்கிரஸ் அரசு ராஜஸ்தானை படுகுழியில் தள்ளியுள்ளது; இனிவரும் தேர்தலிலும் காங்கிரசிற்கு வாக்களிக்கும் தவறை மக்கள்செய்தால் ராஜஸ்தான் இன்னும் அடிமட்டத்துக்கு செல்லும் அல்லது சிதைந்துபோகும் என்று வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

Leave a Reply