லோக்சபா கூட்டங்களில் 50 சதவீதத்துக்கும்  குறைவாக கலந்து கொண்ட சோனியா, ராகுல் இதுவரை நடந்த லோக்சபா கூட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான கூட்டங்களிலேயே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் , அவர்களது நம்பிக்கை நட்ச்சத்திரம் ராகுலும் பங்கேற்றுள்ளனர். அதேநேரத்தில் பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி 82 சதவீத கூட்டங்களிலும் , ராஜ்நாத்சிங் 80 சதவீத கூட்டங்களிலும் பங்கேற்று நாட்டின் மீதான தங்கள் அக்கறையை வலுவாக பதிவு செய்துள்ளனர்.

15வது லோக் சபாவின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. நடப்பு ஆட்சியின் கடைசிமழைக்கால கூட்டத்தொடர் இதுவாகும். இதற்குமுன் நடைபெற்ற 314 கூட்டங்களில் 135ல் மட்டுமே சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளனர். இத்தகவல் லோக்சபா இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் லோக்சபா கூட்டங்களில்பங்கேற்ற உறுப்பினர்கள் குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களில் வருகைபதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்தான் மிககுறைந்த அளவில் உள்ளார். இணையதள விபரத்தின்படி சோனியா 48 சதவீதம் வருகைபதிவும், ராகுல் 43 சதவீதமும், பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி 82 சதவீதமும், ராஜ்நாத்சிங் 80 சதவீதமும் பெற்றுள்ளனர்.

Leave a Reply