பா.ஜ.க., மூத்த தலைவர் எல்கே. அத்வானி நேற்று தனது திருமண நாளின் 50-வது ஆண்டு விழாவை தலை நகர் டெல்லியில் கொண்டாடினார்.

முன்னாள் துணை பிரதமரும், மத்திய அமைச்சருமான அத்வானி (87) நேற்று மீண்டும் மணமகனாக மாறி தனது மனைவி கமலாவின் கழுத்தில் சம்பிரதாயப் படி மாலை அணிவித்து குடும்பத் தாரையும், பா.ஜ.க. தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, மத்தியமந்திரிகள், டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், நாகலாந்து மாநில கவர்னர்கள், சிலமாநிலங்களின் முதல் மந்திரிகள், முன்னாள் மத்திய-மாநில மந்திரிகள், பாஜக. மேலிட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் இவ்விழாவுக்கு நேரில்வந்து அத்வானி-கமலா தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply