500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்ற நடவடிக்கைக்கு 90% சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை பயன்தரும் என, 90 சதவீதம் பேர் நம்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கருத்துக் கணிப்பில் இம்முடிவு தெரியவந்துள்ளது.

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த 8-ம் தேதி திடீரென செல்லாத வையாக்கி, பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதன்விளைவாக ஏடிஎம்கள், வங்கிகள் முடங்கி பணத் தட்டுப்பாட்டால் பொது மக்களும், தொழில் நடவடிக்கைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் வெகுவாக பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சுருங்கி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இவ்விவகாரத்தில் மக்களின் எண்ணங்களை நேரடியாக அறிய பிரதமர் நரேந்திரமோடி தனது பிரத்தியேக செயலியின் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தினார். 10 முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கோரி, பொதுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

சுமார் 30 லட்சம்பேர் இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். இதில், 90 சதவீதம் பேர், 500, 1000 தடைசெய்யப்பட்ட நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 92 சதவீதம் பேர் இந்நடவடிக்கையால் நல்லபலன் கிடைக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.இதில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply