''கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி , அதிரடியாக அறிவித்தார்.கறுப்புப் பணத்தை மீட்பதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமடைந்து வரும் நிலையில், இந்தியாவில், பலகோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புழக்கத்தில் விட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று விவாதிக்கப் பட்டது. அதை தொடர்ந்து, 'டிவி' மூலம், நாட்டு மக்களிடையே, பிரதமர் நேற்று உரையாற்றினார்.

கறுப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டுக்கு எதிராக புதியபோரை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, தன், 40 நிமிட உரையில் மோடி குறிப்பிட்டார். இதற்காக எடுக்கப்பட்டுள்ள பல அதிரடிமுடிவுகள் குறித்து, அவர் அறிவித்தார். அதன் படி, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் இனி செல்லுபடியாகாது என, அதிரடியாக அறிவித்தார்.

இந்த அறிவிப்புகளால், பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள மோடி, ''துாய்மை இந்தியா திட்டத்துக்கு அளித்த ஆதரவைபோல, பொருளாதாரத்தை துாய்மைப்படுத்தும் இந்த திட்டத்துக்கும் அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும்,'' என, உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.பிரதமர் நரேந்திர மோடி

Leave a Reply