தமிழகத்தில் செயல்பட்டு வரும் “108′ இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு விளம்பர கட்டணமாக சுமார் 1 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த விளம்பரம் முதல்வர் குடும்பத்துக்கு சொந்தமான சன் தொலைக்காட்சி மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என தெரியவருகிறது,

அரசு தொலைக்காட்சியான பொதிகை சேனலுக்கு கூட 108 இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கான விளம்பரம் தராதது ஆச்சர்யமாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டிசம்பர் 30-ம் தேதி இ எம் ஆர் ஐ. தலைமை செயல்இயக்குநரிடமிருந்து பெற்ற கேள்வி- பதில்;

கேள்வி: 108′ இலவச ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரம் கலைஞர் மற்றும் சன் தொலை காட்சிகளில் ஒளிபரப்ப படுகின்றது . இந்த விளம்பரம் இலவசமா ? அல்லது கட்டணமா? கட்டணம் எனில் ஒருமுறை விளம்பர கட்டணம் எவ்வளவு ?

பதில்: 108 ஆம்புலன்ஸ் தொடர்பான விளம்பரம் இலவச விளம்பரம் கிடையாது . கட்டண விளம்பரம்தான். ஒரு முறை 10 விநாடி விளம்பரத்துக்கு சன் டி.வியில் ரூ. 23,474ம், கலைஞர்-டிவியில் ரூ. 9,700ம் செலுத்த வேண்டும் என இ.எம்.ஆர்.ஐ. பதில் தெரிவித்துள்ளது .

கேள்வி: இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக சன் மற்றும் கலைஞர் டிவிகளுக்கு இன்று வரை எவ்வளவு தொகை செலுத்தப்பட்டடுள்ளது?

பதில்: இன்று வரை கலைஞர் மற்றும் சன்டிவி விளம்பரத்திற்க்கு செலுத்தப்பட்ட தொகை ரூ. 1,01,53,320 என பதில் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.