இந்தியாவின் மீதான சீனாவின் திடீர் காதல்  சீனா எப்போதும் பாகிஸ்தானையே தனதுநண்பனாக கருதிவந்துள்ளது. இந்தியா உடனான சீனாவின் நட்பு 1962 –ல் நடந்த போருக்குபின் எந்த முன்னேற்றமும் அடையாமல் பின்னடைவையே அடைந்துள்ளது. சர்வதேசளவில் பெரும்பான்மையான நிகழ்வுகளில் இந்தியாவின் எந்த நிலைப் பாட்டையும் அது ஆதரித்ததில்லை. மேலும் கூறுவதானால்

சர்வதேசரங்கில் இந்தியாவுக்கு எதிரான கொள்கையையே சீனா எப்போதும் கடைபிடித்துவந்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பை சீனா ஒரு போதும் அங்கீகரித்ததில்லை.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம்எனபது நீண்ட வரலாறுடையது. தலிபானை பாகிஸ்தானும், தலிபானின் எதிர்ப்புகுழு Northern Alliance –ஐ இந்தியாவும் ஆதரித்தன. தலிபான்கள் பாகிஸ்தான் மற்றும் சவூதிஅரேபியா ஆகிய நாடுகளின் உதவியோடு காபூலை ஆண்டுவந்த Northern Alliance – ஐ தோற்கடித்து அவர்களை நாட்டின் வடக்குபகுதிக்கு விரட்டியடித்து ஆட்சியை கைப்பற்றி னார்கள். பின்னாளில் Northern Alliance–ன் தலைவரான அஹமத்ஷா மசூத்தை தந்திரமாககொன்று கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் ஆதிக்கம் அதிகரித்து இந்தியாவின் ஆதிக்கம்குறைந்தது. பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற தலிபான்கள் அமெரிக்காவிடம் தோல்விகண்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்கதொடங்கியது.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிப்பதென்பது தனக்கு ஆபத்து என்றே எப்போதும் பாகிஸ்தான்கருதுகிறது. இவ்விஷயத்தில் சீனாவும் வழக்கம்போல் பாகிஸ்தானின் கருத்தை ஆதரித்தது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கத்தை சீனா அப்போது_விரும்பவில்லை. ஆனால் தற்போது சீனாவின் கொள்கையில் மிக பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் உணரமுடிகிறது.

கடந்த சிலநாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் சீனாவின் புதியஅதிபர் ஷிஜின்பிங் உடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, இந்தியா தொடர்பான சீனாவின்கொள்கை நிலைப்பாட்டில் ஒருநேர்மறையான மாற்றம் தென்பட்டதாக இந்திய அதிகாரிகள்தரப்பில் கூறப்பட்டது. அச்சந்திப்பின்போது அதிமுக்கியமான உலகரசியல் நிகழ்வுகள் குறித்து வருங்காலத்தில் இந்தியாவுடன்  கலந்தாலோசிக்க சீனா சம்மதம் அளித்ததாகவும், அது உலகரசியலில் இந்தியாவின் பங்களிப்பை சீனா ஏற்று கொள்ளத் தொடங்கியமைக்கான ஒருஅடையாளம் என்றும் இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர்.

இம்மாத இறுதியில் ஆப்கானிஸ்தானின் அரசியல்நிலைமை குறித்து விவாதிக்க இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்திய வெளியுறவுதுறை அதிகாரி யாஷ்சின்ஹா தலைமையிலான இந்தியகுழுவும், சீனவெளியுறவு துறை அதிகாரி லுஷாஹுய் தலைமையிலான சீனகுழுவும் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளன. இச்சந்திப்பின்போது 2014–ல் அமெரிக்கபடை வெளியேறியபிறகு ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள், ஆப்கன்பிரச்சினையில் இருநாடுகளின் ஒத்துழைப்பு, தலிபானின் பயங்கரவாதம், ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்துவரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவை குறித்து முதன்முதலாக விவாதிக்கப்பட உள்ளது

இச்சந்திப்பு உண்மையிலேயே சீனாவின் வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தையே நமக்குகாட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பு என்பது தவிர்க்க முடியாதது என்பதை சீனா உணரதொடங்கியுள்ளது. அதைவிட சீனாவின் கொள்கை மாற்றத்திற்கான காரணங்களில் அதன் சுயநலமும் நிறையவே உள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போனால், அது ஏற்கனவே சீனாவின் எல்லை புற தன்னாட்சி மாகாணமான Xianjing–ல் அதிகரித்துவரும் இஸ்லாமிய தீவிரவாதத்தை மேலும் அதிகரிக்கசெய்யும் என சீனா நினைக்கிறது. சீனாவின் Xianjing–மாகாணம் சீன-ஆப்கானிஸ்தான் எல்லைபகுதியில் அமைந்துள்ளது.

இம்மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக்கூறி Turkistan Islamic Party (TIP) என்ற தீவிரவாத அமைப்பு போராடிவருகிறது. இப்பிரச்சினை தற்போது சீனாவுக்கு பெறும்தலைவலியாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கபடைகள் நிலைகொண்டிருந்த காரணத்தினால் TIP அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகள் சற்றுகுறைந்திருந்தன. 2014–ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கபடைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வாபஸ்பெற திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அமெரிக்கபடைகள் வெளியேறினால் Xianjing மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் கொழுந்துவிட்டு எரியக்கூடும் என சீனா நினைக்கிறது. எனவே ஆப்கானிஸ்தான் தொடர்ந்து அரசியல்_ஸ்திரத்தன்மை உள்ள நாடாகஇருப்பது சீனாவுக்கு அவசியமாகிறது.

பாகிஸ்தான் மற்றும் தலிபான்களின் வரலாறுகள் ஏற்கனவே உலகம்முழுவதும் அறியப்பட்டதே. ஆகவே ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கமிருந்தால் மட்டுமே அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை_என்பது சாத்தியமாகும். எனவே ஆப்கானிஸ்தானில் இந்தியாவின்கரத்தை வலுப்படுத்துவது சீனாவுக்கு அவசியமாகிறது. இது தான் இந்தியா மீது சீனா திடீர்காதல் கொண்டதற்கு காரணமாகிறது.

ஒவ்வொருநாடும் தங்களின் சுயலாப, நட்டங்களை கணக்குப் போட்டுத் தான் தங்களின் வெளியுறவு கொள்கைகளை வகுத்துக்கொள்கின்றன. அது போலத்தான் தனது சுயலாபங்களுக்காக தற்போது இந்தியாவை நோக்கி சீனா சற்றுவளையத் தொடங்கியிருக்கிறது. காலம் அளித்துள்ள இந்தவாய்ப்பை சற்றும் நழுவவிடாமல் தனது சுயலாபத்திற்கு இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி ; விஜயகுமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.