அர்ஜூன் சம்பத்த்தின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு  இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத்த்தின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு அவர் அதிர்ஷ்ட்ட வசமாக உயிர் தப்பினார்.

கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் லேக்வியூ

அபார்ட்மென்டில் உள்ள இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத்த்தின் வீட்டின் படுக்கை அறையை நோக்கி இன்று அதிகாலை 4 மணி அளவில் மர்ம மனிதர்கள் பெட்ரோல் குண்டை வீசினர்.

அந்தகுண்டு அதிர்ஷ்ட்ட வசமாக தூண் மற்றும் சுவற்றின் மீது பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மறுநிமிடமே அந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. குண்டுவெடித்த சத்தம்கேட்டு அர்ஜூன் சம்பத் மற்றும் அபார்ட்மென்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் பதறியடித்து எழுந்து . கீழ் தளத்துக்கு ஓடி வந்தனர்.

அங்கு பாட்டில்கள் சிதறிகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் மறு நிமிடமே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கேள்விப்பட்டு இந்து அமைப்பினர் அங்குதிரண்டனர். இதனை தொடர்ந்து அங்கு பதட்டமும் பரபரப்பும் உருவானது . அசம்பாவிதம் ஏதும் உருவாகாமல் தடுக்க அந்தபகுதியில் கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும் கோவையின் முக்கிய பகுதிகளிலும் , கோவில்களிலும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரோந்துபணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

வீட்டின் மீது பெட்ரோல்குண்டு வீசப்பட்டது குறித்து அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

என்னை அச்சுறுத்த எனது வீட்டின்மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன். எனது பணி தொடர்ந்துகொண்டே இருக்கும். கோவையில் வேண்டும் என்றே கடந்த 15 நாளாக பதட்டமான ஒரு சூழ்நிலை உருவாக்கபட்டு வருகிறது . ஏதேனும் அசம்பாவிதம் உருவாகும் முன்பு தமிழக அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.