அறத்தின் திருவுருவாய் அவதரித்த  ஸ்ரீ ராமன் அறத்தின் திருவுருவாய் அவதரித்த ஸ்ரீ ராமரின் ஜனன தினம் சித்திரை சுக்லபட்ச நவமி. அவதார புருஷர்கள் , மஹான்களின் பிறந்த நாளை அவர்கள் பிறந்த திதியை வைத்தே கணக்கிடுவது மரபு. சாதாரண மனிதர்கள் விஷயத்தில் பிறந்த நாளை அவர்களது ஜென்ம நட்சத்திரத்தன்று கொண்டாடுகிறோம் .

ஒரு மனிதன் ஒழுக்கமுள்ளவனாக , தர்ம நெறியைக் கடைப்பிடிப்பவனாக , தாய் தந்தையரை மதிப்பவனாக , ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தோடு எல்ல வகை நற்குணங்களோடு வாழ முடியும் என்பதற்கு எடுத்துகாட்டாக ஸ்ரீராமன் விளங்கினான்.அத்தகைய ஸ்ரீ ராமனை இந்நன்நாளில் வணங்கி வழிபடுவோம் .

என் தேசம் ,உயர் தேசம்

இலங்கையில் யுத்தம் முடிந்தது.அண்ணன் ராவணனின் ஈமக் கடன்களை முடிந்தது விபீஷணன் ,ஊருக்கு வெளியே யுத்த பூமியில் வீற்றிருந்த ராமபிரானின் பதம் பணிந்து ,"அண்ணலே ! செல்வ வளம் கொழிக்கும் சொர்ணபுரி இலங்கையின் ஆட்சியை ஏற்றுக் கொள்ள நகருக்கு வாருங்கள் "என்றான் .

அறமே உருவான ஸ்ரீ ராமன் ,''பதினான்கு ஆண்டுகள் கானகத்திலேயே வசிப்பேன் ;எந்தவொரு கிராமத்துக்கும் உள்ளேயும் காலடி பதிக்க மாட்டேன் என என் அன்னையிடம் நான் வாக்கு அளித்துள்ளேன் .ஆதலால் ,உன் நகருக்குள் நான் வர இயலாது .இலங்கையை ஆக்கிரமிக்க அல்ல ;தர்மத்தைக் காக்க மட்டுமே நான் வில் ஏந்தினேன் ;நாளை லட்சுமணன் உனக்கு மகுடம் சூட்டுவான் . என் உயிரினும் மேலான என் தேசத்தையும் மக்களையும் காணும் நேரம் நெருங்கிவிட்டது .முடி சூடிய நீ , மன்னன் என்ற மமதை இல்லாமல் உன் மக்களுக்காக நல்லாட்சி செய்து வா "என விபீஷணனை அரவணைத்து ஆசி கூறினான்.

ராமாயணம் படித்தால் மட்டும் போதாது

ஒரு பெரியவர் ஸ்ரீ ராமனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர் . தினசரி பல மணி நேரம் ஸ்ரீ ராமனை பூஜிப்பதிலும் ,ராமாயணம் வாசிப்பதிலும் தனது பெருவாரியான நேரத்தைச் செலவிடுகிறார் .ஒரு நாள் ஆர் .எஸ் .எஸ் .சின் தாபகர் டாக்டர் ஹெட் கேவார் அவரைச் சந்தித்தார் .அவரிடம் பேசி கொண்டிருந்த போது, "ஐயா, நீங்கள் ஸ்ரீ ராமனிடத்தில் அபார பக்தியுடையவராய் , தினசரி ராமாயணத்தை வாசிப்பதில் பல மணி நேரத்தை செலவிட்டு வருகிறீர்கள் .ஸ்ரீ ராமனிடத்தில் உள்ள ஏதேனும் ஒரு குணத்தை, பண்பை நீங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறீகளா ?" என்று கேட்டார் . இதைக் கேட்டவுடன் பெரியவருக்கும் முகுந்த கோபம் வந்தது ."ஸ்ரீ ராமன் தெய்வம் .அவரது குணத்தை எல்லாம் சாதாரண மனிதர்களாகிய நம்மால் கடைப்பிடிக்க முடியுமா ? "என்று பதிலளித்தார் . இதைப்பற்றி டாக்டர் ஹெட்கோவர் கூறும்போது, "ஸ்ரீ ராமன் மரியாதா புருஷோத்தமன் (அறம் அறிந்த அண்ணல் ),வாழ்ந்து காட்டியவன் .அவரை நாம் புஜிப்பதன் பலன் அவரிடமிருந்து ஏதாவது ஒரு நல்ல குணத்தையாவது நாம் கடைப்பிடிப்பது தான் . "என்றார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.