பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக, நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த 3பேரை, தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு, மல்லேஸ்வரம், பா.ஜ.க., அலுவலகம் அருகே, கடந்தவாரம் புதன்கிழமை, வெடிகுண்டுவெடித்தது போலீசார் உட்பட, 19 பேர் படுகாய மடைந்தனர். விசாரணையில், குண்டுவைக்க பயன் படுத்திய, இருகரவாகனம், சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. முதல்கட்டமாக, வாகன உரிமையாளர், பெருங்களத் தூரைச் சேர்ந்த பிரகாஷிடம் விசாரிக்கப்பட்டது. அவர், வேலூரைச்சேர்ந்த புரோக்கர்கருக்கு, விற்பனைசெய்ததாக தெரிவித்ததை தொடர்ந்து, புரோக்கர்கள் முருகன் மற்றும் அன்வர்பாஷா விடம், விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது விசாரணையில் கிடைத்த தகவல்படி , தமிழகத்தின் பல பகுதிகளில், போலீசார் விசாரித்துவந்தனர். வாகன புரோக்கர்கள் கொடுத்த தகவலைஅடுத்து, கேரளமாநிலம் ஆலப்புழாவில் இருவரை விசாரித்தனர். அதில் கிடைத்ததுப்பு அடிப்படையில், கம்ப்யூட்டரின் மூலம், பயங்கரவாதிகளின் , வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தவரைபடங்கள், பெங்களூரு அனுப்பப்பட்டு, அங்கிருந்த வீடியோ பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.

சென்னை, பிராட்வே பஸ்நிலையம் அருகே இருவரை, விசாரித்தனர். அவர்கள் நெல்லைமாவட்டம், மேலப்பாளையத்தை சேர்ந்த, பீர்முகமது, 32, மற்றும் பஷீர்அகமது, 35, என்பது தெரியவந்தது. போலீசார் தயாரித்த கம்ப்யூட்டர் வரை படங்களுடன், அவர்களது உருவம் ஒத்துப்போனதை தொடர்ந்து, இருவரையும் கைதுசெய்தனர்.

பெங்களூரு சம்பவத்தில் இவர்களுக்கு முக்கியபங்கிருப்பது தெரியவந்தது. இருவரையும் விசாரணைக்காக, பெங்களூருக்கு, போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரின், மொபைல்போன் எண்களையும் ஆய்வுசெய்ததில், மதுரையில் இருந்து ஒருவர், அடிக்கடி அழைத்துபேசியிருந்தது தெரியவந்தது; அந்த அழைப்புகளை, போலீசார் கண்காணித்தனர். மதுரை, கேகே.நகர் பகுதியில், கோர்ட் எதிரில்உள்ள ஓட்டலில் தங்கியிருந்த, மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான்புகாரி, 38 என்பவர்தான், அந்த எண்ணுக்கு சொந்தக்காரர். அவரையும், அவருடன் இருந்த, முகமதுசாலின் என்பவரையும், போலீசார் கைதுசெய்தனர். முகமது சாலின், சிலநாட்களுக்கு முன், நாகர்கோவிலில், “வாக்கிங்’ சென்ற பா.ஜ., பிரமுகர் எம்.ஆர்.காந்தி வெட்டப்பட்டவழக்கில் தேடப்பட்டவர். இவர்மீது, மேலப்பாளையம், மூன்றடைப்பு, தச்ச நல்லூர் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன . மேலப்பாளையத்தில் நடந்த சிலகொலைகளில், இவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலப்பாளையத்தில், மாட்டுச்சந்தை நடத்தி வந்த கிச்சான் புகாரியும், கட்டட தளவாடபொருட்கள் புரோக்கராக செயல்படும் பஷீர் அகமதுவும் நெருங்கியநண்பர்கள் என்பதும், பீர்முகமது, பஷீர் முகமதுவும் ஒரேபகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இணைந்து செயல்பட்டதாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தின் அருகே, பஷீர் மற்றும் பீர்முகமது ஆகியோர் இருந்ததற்கான ஆதாரங்களும், போலீசாரிடம் சிக்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.