கோத்ரா கலவரத்தில் மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை குஜராத்தில் சென்ற 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தில் மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழு தெரிவித்துள்ளது.

2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத்தொடர்ந்து மாநிலத்தின் பலபகுதிகளில் வகுப்புக்கலவரம் வெடித்தது. இதில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்று சிறப்புப்புலனாய்வு குழு தாக்கல்செய்திருந்த மனுவை எதிர்த்து ஜகியா ஜாஃப்ரி மனு தாக்கல்செய்திருந்தார். இதைத்தொடர்ந்து வழக்குரைஞர் ஒருவர் தலைமையிலான சிறப்புப் புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

தீஸ்தா செதால்வட் மற்றும் சிலர் முதல்வர் நரேந்திரமோடிக்கு எதிராக தவறானபுகார் அளித்துள்ளதாக எஸ்.ஐ.டி., வழக்குரைஞர் ஆர்.எஸ். ஜமுவார் தெரிவித்துள்ளார் . கலவரக் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று காவல் துறை உயர் அதிகாரிகளிடம் மோடி தெரிவித்ததாக தீஸ்தா உள்ளிட்டோர் கூறும்புகாருக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று வழக்குரைஞர் ஜமுவார் கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.