கர்நாடகாவில்   500 கிலோ அமோனிய நைட்ரேட் வெடிபொருட்கள் பறிமுதல் கர்நாடகா மாநிலம் கோலாரில் 500 கிலோ அமோனிய நைட்ரேட் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை கர்நாடக சட்ட சபை தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

கர்நாடக சட்ட சபை தேர்தல் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிகளவிலான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பது, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சட்ட விரோத செயல்களை கண்காணிக்க தேர்தல் கமிஷன்சார்பில் நியமிக்கப்பட்ட பறக்கு படை மூலம் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெரியளவில் ‌தாக்குதல் நடத்தவே பயங்கரவாதிகள் இந்த வெடிபொருளை எடுத்து வந்திருக்கவேண்டும்‌ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோலார் மாவட்டத்தை சேர்ந்த மெஹபூப் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இவனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.