இலங்கை காமன்வெல்த் மாநாடை  தடுக்கா விட்டால்  40 எம்பி.க்களும் ராஜிநாமா செய்யவேண்டும் இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாடை நடைபெறாமல் தடுக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 40 எம்பி.க்களும் ராஜிநாமா செய்யவேண்டும் என தமிழக பா.ஜ.க., வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :

இலங்கை தமிழர்பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் மத்திய அரசு புறக்கணித்துவருவது வருத்தம் தருகிறது . காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இருப்பினும் , இலங்கையில் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எனவே, தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து இலங்கை காமன் வெல்த் மாநாடு நடைபெறாமல் தடுக்குமாறு வலியுறுத்தவேண்டும். இதனை பிரதமர் ஏற்கவில்லை எனில் 40 எம்பி.க்களும் ராஜினாமா செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply