தமிழகத்தில் தி.மு.க., தோற்கடிக்கப்படவேண்டும் என நாகர்கோவிலில் நடந்த குமரி கோட்ட பா.ஜ., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார,

கன்னியாகுமரி, திருநெல்வேலி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி மாவட்டங்கள் சேர்ந்த குமரி கோட்ட பா.ஜ., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட பாஜ., அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி துணை தலைவர் ராஜேஷ்பாபு தலைமை வகித்தார,

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது;-பா.ஜ., தாமரை யாத்திரை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கி.மீ., தூரம் சென்று லட்சக்கணக்கான மக்களை நேரில் சந்தித்து வரும் 29ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. இந்நிகழ்ச்சியில் அகில பாரத தலைவர் நிதின்கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.தமிழக அரசியல் வரலாற்றில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தற்போதைய சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி சம்பந்தமாக ஆலோசசனை நடத்தி வருகின்றன. எந்த கட்சியோடு கூட்டணி தொடரலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால் பா.ஜ.,வை பொறுத்தவரை நம்மை நாம் பலப்படுத்தி கொள்ளவேண்டும். அதனை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் ஆளும் தி.மு.க., தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்கு எதிர்கட்சிகள் அனைத்து கட்சிகள் ஒன்று சேர்ந்து தோற்கடிக்க முன்வரவேண்டும். தி.மு.க.,வை விட காங்., கட்சி தீங்கானது. கடந்த 56 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வரும் காங்., கட்சி ஊழலில் திளைத்து வருகிறது. மிக பெரிய ஊழல் நடத்தி வருகிறது. அது ஆளும் மாநிலங்களில் அனைத்திலும் ஊழலில் மிதந்து வருகிறது. அது போன்று அதன் கூட்டணி கட்சியான தி.மு.க., வும் ஊழலில் திளைத்து வருகிறது.

2010ல் மிக பெரிய மெகா ஊழல் நடந்துள்ளது.தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேறினால், தி.மு.க., வுடன் கூட்டணி யார் வைத்துக்கொள்வார்கள் என தி.மு.க., வினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.இதனால், தி.மு.க.,- காங்., கட்சிகள் புறக்கணிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் நாம் நம் பங்கை ஆற்றவேண்டும். பா.ஜ.,வை பொறுத்தவரை நல்ல இளைஞர்கள் உள்ளனர். மக்கள் நம் பக்கம் உள்ளனர். நாம் நம் கடமையை செய்வோம். நம் பணியை தொடர்ந்து செய்வோம். இதற்கான ஆலோசனை கூட்டம் தான் இன்று குமரி கோட்ட இளைஞரணி சார்பில் நடத்தப்படுகிறது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.