அறிவின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, உங்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியவை வேதங்கள் நம் வேதங்கள் மற்றும் உபநிடந்தங்களின் ஈடு இனையற்ற மான்பினை பல அறிஞர்களும், மேதைகளும் வியந்து போய் பாராட்டுவது அனைவருக்கும் தெரியும். உங்கள் அறிவின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, உங்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியவை நம் வேதங்கள் மற்றும் உபநிடந்தங்கள்.

வெள்ளையர்களும், மற்ற அரேபிய கொள்ளையர்களும் ஆரம்ப காலத்தில் இவற்றை குறைத்து மதிப்பிட்டனர். பின்னர் அவர்களின் மத அறிஞர்கள் இதை படித்த பின் இதன் அளப்பறிய அறிவுக் களஞ்சியம் அவர்களுக்கு தெரிய வந்தது. சனாதன தர்மத்தின் ஈடு இனையற்ற இந்த பொக்கிஷங்களை படித்த பின் தங்களுடைய மதங்கள் எத்தனை சிறுமையானது என்று அவர்களுக்கு தெரிய வந்தது. ஆனால் மதம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல. அது உலகம் முழுதும் ஆளுமை செல்லுத்துவதற்கு ஒரு கருவி. உலகம் முழுதும் தம் மதத்தை பல கோடி பேர் பின்பற்றுகிறார்கள் என்றால், அத்தனை கோடி பேரும், அம்மதத்தின் தலைமை அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த பயன் படுவார்கள். ஆகையால் தங்கள் மதங்களை எப்படியாவது உயர்த்த வேண்டும் என்று யோசித்தனர். அப்படி யோசித்ததன் விளைவாக தான் ஒரு சூழ்ச்சியை உருவாக்கினர். அதாவது ஹிந்துக்களின் ஆதாரமும், அடிப்படையுமாக உள்ள, ஈடு இனையற்ற வேதங்களையும் உபநிடந்தங்களையும் அவர்களிடம் இருந்து பிரிப்பது எனும் சூழ்ச்சி.

நீங்கள் பல இந்து விரோத அமைப்பினர் , வேதங்கள் மற்றும் உபநிடந்தங்கள் சொல்வதை ஹிந்துக்கள் பின்பற்றுவதில்லை எனும் கருத்தை மீண்டும், மீண்டும், சொல்வதை அடிக்கடி எதிர் கொள்வீர்கள். அது இந்த சூழ்ச்சியின் விளைவுதான். இந்த அடிமைகள் மூலமாக, தலைமையிடம் த‌ன் சூழ்ச்சியை பரப்புகிறது. வேதங்களும், உபநிடந்தங்களும் ஏதோ அருவ வழிபாட்டை முன்நிறுத்துவது போலவும், வேதமும், வேதாந்தமும் இவர்களின் புனித நூல்களோடு ஒத்து இருப்பதாகவும், ஒரு பொய் புரட்டை திட்டமிட்ட வகையில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

"ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி" என்கிறது ரிக் வேதம். இறைவன் ஒருவனே ஆனால் ஞானிகள்/அறிவுள்ளவர்கள் அதை பலவாக சொல்கிறார்கள் என்று இது பொருள் படுகிறது. இங்கே நாம் பார்க்க வேண்டியது, முட்டாள்கள் அதை சொல்கிறார்கள் என்று வேதம் குறிப்பிடவில்லை. "விப்ர" என்றால், அறிவாளிகள், ஞானிகள் என்றே பொருள்படுகிறது. ஆகையால் வேதமே, இறைவனை அவரவர் வழியில் பார்ப்பதை, பலவிதமான உருவங்களோடும், தன்மைகளோடும் இறைவனை பார்ப்பதை ஒரு இயற்கையான செயல்பாடு என்று உரைக்கிறது, அங்கீகரிக்கிறது.

ஆனால் இந்த மானங்கெட்ட இந்து மத விரோதிகள் இதை பாரதத்தில் ஒரு பெரும் சூழ்ச்சியோடு கையாள்கிறார்கள் . படிக்காத, விஷயம் தெரியாத, பாமரர்களை, ஏதோ வேதத்திற்கும், உபநிடந்தங்களுக்கும் எதிராக உருவ வழிபாடு நடப்பது போல் ஒரு தவறான செய்தியை பரப்பி, அதன் மூலமாக மத வியாபாரம் செய்கின்றன.

இன்றைய காலத்தில் மதம் என்பது வெறும் சித்தாந்தம் சார்ந்ததல்ல, நம்பிக்கை சார்ந்ததல்ல, ஆளுமையை நிறுவக்கூடிய அஸ்திரம். நாம் ஒவ்வொருவரும்தான் விழிப்புணர்வை அனைவருக்கும் பரப்ப வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.