38  அவசரநிலை பிரகடனம் இந்திய ஜனநாயகத்தின் மிகக் கொடுமையான காலம்வருடங்களுக்கு முன் , இந்திய ஜனநாயகம் ஒரு மிகக் கொடுமையான சோதனையைச் சந்தித்தது. 1975-ம் வருடம் ஜூன் மாதம் 25-ம் தேதி நடு இரவில் , அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டது. ஆட்சியில் இருக்கத் தகுதி இழந்த சில திமிர் பிடித்த அரசியல் வாதிகள், பதவியிலிருந்து விலகாமல், அதிகார மமதை தலைக்கேறி, , நாட்டின் ஜனனாயக நேறி முறைகளை காலடியில் போட்டு மிதிக்க முற்பட்டனர்.

எனக்கு அப்போது 25 வயது. இளைஞன். ஆர் எஸ் எஸில் ஊழியம் செய்ய முற்பட்டிருந்தேன். இருண்ட அந்நாட்களில் நான் நேரில் கண்ட அவசர நிலையின் அட்டூழியங்களெல்லாம் இன்றும் நன்றாக என் நினைவில் பதிந்திருக்கின்றன. தனிமனித சுதந்திரம் மிருகத்தனமாக மிதிக்கப்பட்ட விதம், எப்படி அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு மிசா சட்டம் பயன்படுத்தப் பட்டது, ஊடக அலவலங்கள் முறையற்று மூடப்பட்ட விதம்,. 19 நெடும் மாதங்கள் லக்ஷக்கணக்கான மக்கள் திடமாக போராடிய விதம் இவற்றை யாரால் மறக்க இயலும் ? தமது உயிர் உடமைகளுக்கு ஆபத்து என்று தெரிந்தும் , மக்கள் ஜனநாயக உரிமைகளை மீண்டும் மலரச் செய்யப் போராடினர். அதே லட்சியத்திற்கக்ப் போராடிய பல்வேறூ தலைவர்களுடனும் அமைப்புகளுடனும் நெருங்கி உழைப்பதற்கு , என் போன்ற இளைஞர்களுக்கு அவசர நிலை ஒரு அற்புதமான வாய்ப்பாக அமைந்தது.

எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த , ஸ்ரீ அடல் பிஹாரி வாஜபேயீ, அமரர் ஸ்ரீ நாநாகி தேஷ்முக், அமரர் ஸ்ரீ தத்தோபந்த் தெங்காடி போன்றவரிலிருந்து, நாங்கள் சார்ந்திருந்த அமைப்புகளையும் தாண்டி சோஷலிஸ்டான ஸ்ரீ ஃபெர்னான்டெஸ், ஸ்ரீ மொரார்ஜி தேசாயுடன் நெருக்கமான காங்கிரஸைச் சேர்ந்த அமரர்ஸ்ரீ ரவீந்த்ர வர்மா போன்றவர்களுடன் சேர்ந்து உழைக்க அது வழி செய்தது. இவர்களெலாம் அவசரநிலை குறித்து மிகவும் கோபமும் அதிருப்தியும் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட பல்வேறு கருத்துடைய தலைவர்களுடன் வேலை செய்தது எங்களை மிகவும் உற்சாகப் படுத்தியது.

முக்கியமாக, முன்னாள் குஜராத் பல்கலைக் கழக துணை வேந்தர் ஸ்ரீ திருபாய் தேசாய், மனித நேயர் ஸ்ரீ சி டி தாரு, மற்றும் முன்னாளைய குஜராத் முதன் மந்திரிகளான ஸ்ரீ சிமந்பாய் படேல், ஸ்ரீ ஜஷிபய் படேல் ஆகியோருடனும் , பெயர் பெற்ற முஸ்லிம் தலைவர் ஸ்ரீ ஹபிப் –உர்- ரஹ்மான் போன்றோரிடமிருந்து மிகவும் கற்றுக் கொண்டேன். காங்கிரஸை விடாமல் எதிர்த்தது மட்டுமல்லாமல் அக்கட்சியிலிருந்து விலகிய மறைந்த ஸ்ரீ மொரார்ஜி தேசாய் அவர்களின் திடமும் போராடிய விதமும் நினைவு கூரத்தக்கன.

ஒரு மகத்தான ,அரும் பெரும் செயலை ஆற்றுவதற்காக ஏற்பட்ட உயர்ந்த சிந்தனைகள், கொள்கைகளின் உய்ர்த்தெழுந்த சங்கமமாகவே அது தோன்றியது. அப்போது ஜாதி, மதம், கட்சி , இனம் இவற்றை மீறி பொது நோக்கான நாட்டின் ஜனநாயகப் பண்புகளை நிலை நாட்ட நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்துக் கொண்டிருந்தோம். 1975 டிஸம்பர் மாதம் , அஹமதாபாத் நகரத்தில், காந்திநகரில், எதிர்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மிக முக்கியமான கூட்டத்திற்கக நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். இதில், சுயேச்ச உறுப்பினர்களான மறைந்த ஸ்ரீ புருஷோத்தம் மால்வங்கர், ஸ்ரீ உமாசங்கர், மற்றும் ஸ்ரீ கிருஷ்ண காந்த் ஆகியோரும் பங்கேற்றனர்.

நாட்டின் நலனுக்காக, கருத்து வேற்றுமை கொண்ட பல்வேறு நபர்களும் அமைப்புகளும் இப்போது தமது வித்தியாசங்களை மறந்து, ஒன்று சேர்ந்து  உழைத்தன. உதாரணமாக, பி எம் எஸ் , இடது சாரி உழைப்பாளார் சங்கங்களுடன் கை கோர்த்து நின்றது. பல்வேறு அமைப்புக்ளின் மாணவர் குழுக்களுடன் நாங்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்தோம். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அரசியல் கார்ணமக சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும், ஜனநாயகம் காப்பதற்கக ஒன்றாக இணைந்தன. முன்னால் அரசியலில் தீண்டத்தகாததாகக் கருதப்பட்ட ஆர் எஸ் எஸுடன் இப்போது மக்களும் அமைப்புகளும் சேர்ந்து உழைத்தன. 1974-ம் ஆண்டு குஜராத் நவ நிர்மாண் இயக்கமும், பிஹாரில் ஜெ பியின் இயக்கமும் ஒன்று சேர்ந்து மக்கள் மன்றத்தில் வந்தது போல் இருந்தது !

நாட்டில் நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளைக் கவலையுடன் நோக்கிக் கொண்டிருந்த பல்வேறு அர்சியல் சாராத சமூக சேவை நிறுவனங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு , எனக்கு அவசரநிலையின் போது கிடைத்தது. காந்தியவாதிகளுடனும், சர்வோதய இயக்கத் தொண்டர்களுடனும் ஏற்பட்ட நெருக்கம் என்னை மிகவும் வளப்படுத்தின. 1975 ஜூலை ஒரு மாலையில் தான் , பழுத்த காந்தியவாதியான ஸ்ரீ பிரபுதாஸ் பட்வாரி அவர்களின் இல்லத்தில் நான் ஸ்ரீ ஃபெர்னான்டெஸ் அவர்களைச் சந்தித்தேன். தாடி மீசையுடன், அவருக்கே உரிய இஸ்திரி போடாது, கசங்கிய மேல் சட்டையுடன், தலையில் கட்டிய பச்சை முண்டாசுடன் , தனது மஞ்சள் ஃபியட் காரில் வந்து இறங்கினார் ஸ்ரீ ஃபெர்னான்டெஸ். ஸ்ரீ நாநாஜி தேஷ்முக் அவர்களும் அங்கிருந்தார்கள் இவ்விருவரும் பிரதம மந்திரிக்கு சிம்ம சொப்பனம்.

அவசரநிலை நாட்களை நான் நினைத்துப் பார்க்கும்போது, 1977-லேயெ முதல் வாய்ப்பிலேயே, தணிக்கை செய்யப்பட்ட, பாரபக்ஷமான, ஒருதலைப் பக்கமான ஊடகங்கள் இருந்த நிலையில், அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்த இந்திய மக்களின் தொலை நோக்கைக் குறித்து அவர்களை வணங்காமல் இருக்க இயலாது. மின்னணு ஊடகம் என்பது அப்போது குழவிப் பருவத்தில் இருந்தது.; சமுக தளங்கள் என்பது அறவே ஏற்படவில்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் பிரதமரால் அவசரநிலை கொணர்ந்திருக்க முடியுமா ? அப்படிக் கொண்டு வந்தாலும், அவ்வளவு நாட்கள் நீடித்திருக்குமா ? என்று எண்ணுகிறேன்.

அவசரகால்ம் பற்றிய எனது நினைவுகளை விவரமாக எனது " அவசரகாலத்தில் குஜராத்" என்னும் புத்தகத்தில் குறித்திருப்பதை இப்போது ங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முக்கியமாக அதில் பக்கம் 200க்கு உங்கள் கவனத்தைத் திருப்புகிறேன்.அதில் எவ்வாறு மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட பல்வேறூ இயக்கங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தன என்பதை விளக்கியிருக்கிறேன்.

" பெரும்பாலும் தாம் தோன்றிய காரணங்களை ஒன்றுக்கொன்று ஏற்றுக்கொள்ள மறுத்ததின் காரணமாக பல்வேறு அமைப்புகளுக்கிடையே இருந்த இடைவெளி பெரும்பாலும் வேண்டுமென்றேயும், எதேச்சையாகவும் ஏற்பட்ட வித்தியாசங்களே. " எங்களோடு இல்லாமையாலேயே நீ எங்களுக்கு எதிரி " என்ற மனப்பான்மை வேறு இந்த இடைவெளியை இன்னும் விரித்து விட்டது. , ஆனால், அப்போது நடந்த நிகழ்வுகள் அமைப்புகள் ,தம்முடைய வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் மீறி ஒந்றுக்கொன்று  புரிந்து கொண்டு ஒன்று சேர்வதற்கு வழி கோலின." பலர் அப்போது  பிறந்திருக்கக்கூட மாட்டீர்கள். அவர்களையெல்லாம் , மக்களின் மகத்தான வெற்றி என்று இப்போது கொண்டாடப்படுவதையும், அந்நாளைய சரித்திரச் சூழலையும் பற்றித் தெரிந்து கொள்ள , என்னுடைய புத்தகத்தைப் படிக்கக் கோருகிறேன்.

நன்றி, நரேந்திர மோடி. .

நன்றி தமிழில்; ராஜகோபாலன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.