ஹைதர்-திப்பு மணிமண்டபம்: தமிழனுக்கு அவமானம். ஞாயிற்றுக்கிழமை 23.06.2013 அன்று மாலை 6 மணிக்கு சென்னை மஹரிஷி வித்யா மந்திர் பள்ளியின் உள்ளரங்கில், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் சார்பில், "ஹைதர் – திப்பு மணிமண்டபம் – தமிழனுக்கு அவமானம்" என்ற தலைப்பில், ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் பாரத்த்தில் அரங்கேற்றிய வன்கொடுமைகள் பற்றிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

சேதமில்லா ஹிந்துஸ்தானம் அதைத் தெயவமென்று கும்பிடடி பாப்பா என்று பாரதி பாடி மகிழ்ந்த தேசத்தாயை வணங்கிப் பாடுகிறார் திரு. சாரதி கிருஷ்ணன் அவர்கள்.

வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் மக்கள் தொடர்பாளர் திரு.இராஜேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர் திரு.ரங்கநாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் தலைவர் பால கௌதமன் ஆவணங்களை வெளியிட்டு உரையாற்றினார்.

 

கொடுங்கோன்மைக்குச் சில எடுத்துக்காட்டுகள்:

  • ஹைதராலும் திப்புவாலும் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் பல லட்சங்களில்.
  • தஞ்சைப்ப்குதியில் 10 ஆண்டுகளுக்குத் திருமணத்துக்குத் தகுதியான ஆண்கள் இருக்கக்கூடாது என்ற வகையில் இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் திப்புவும் ஹைதரும்..
  • ஹிந்துத் தாய்மார்களைத் தூக்கிலிட்டு அவர்கள் கழுத்திலேயே அவர்களின் குழந்தைகளையும் தூக்கிலிட்டுக் கொலை செய்த கொடூரர்கள் திப்புவும் ஹைதரும்.
  • ஹைதராலும் திப்புவாலும் இடிக்கப்பட்ட கோவில்கள் 8000 என்பது குறைந்தபட்ச கணக்கீடு.
  • ஸ்ரீமுஷ்ணம் கோவில், விருத்தாசலம் கோவில், திண்டுக்கல் மலை மீதிருந்த பத்மகிரீஸ்வரர் கோவில், காட்டுமன்னார்கோவில் ராஜகோபால ஸ்வாமி கோவில் ஆகியன ஹைதர்-திப்பு இடித்த கோவில்களில் பிரசித்தி பெற்றவை.
  • ஜிஹாத் தன்னும் புனிதப் போரை நடத்தி பாரத தேசத்தை இஸ்லாமிய நாடாக்குவதே தன் லட்சியம் என்று கடிதம் எழுதியவன் திப்பு.
  • பசு மாமிசத்தை ஹிந்துக்கள் வாயில் திணித்து கட்டாய மதமாற்றம் செய்தவர்கள் ஹைதரும் திப்புவும்.
  • ஹிந்துப் பெண்களைக் கடத்தி ஐரோப்பியருக்கும் அராபியருக்கும் அடிமையாக விற்ற கொடூரன் திப்பு.
  • ஊர்களூக்கு ஹிந்துப் பெயர்கள் இருப்பது பொறுக்காது சத்தியமங்கலத்தை சலாமாபாத் என்றும் திண்டுக்கல்லை இஸ்லாமாபாத் என்றும் பெயர் மாற்றியவன் திப்பு.

ஆவணங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பல தேசிய இயக்கத் தலைவர்கள் கலந்துகொண்டு ஒரே குரலாக ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகிய இருவருக்கும் சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் எனும் அந்தஸ்து கொடுப்பது மிகவும் தவறானது என்பதையும், அவர்களைப் பாராட்டி மணிமண்டபம் கட்டுவது தமிழருக்கும் இந்தியர்களுக்கும் பெருத்த அவமானம் என்பதையும், வெளியிடப்பட்ட ஆவணங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன என்று உறுதிபடுத்தினர்.

'இந்தக்  கொடுங்கோலனின் சுயரூபத்தை மக்களிடம் பிரச்சாரமாக எடுத்துச் செல்லவேண்டும்' என்று சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.நம்பி நாராயணன் பேசினார்.

'ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை என்ற பெயரால் வரலாற்றைத் திரித்துவிட்டார்கள். தன் வரலாறு அறியாத சமூகம் எப்படிச் சிறப்பாக வாழ முடியும்?' என்று கேள்வி எழுப்பினார் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவரும் ஹிந்து மித்திரன் பத்திரிகையின் ஆசிரியருமான மூத்த பத்திரிகையாளர் திரு. ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி அவர்கள்.

'தன் சொந்த நிலத்தையா கொடுத்தார் தமிழகமுதல்வர்? அது தேசத்தின் பகுதியல்லவா?  மக்களின் முழு ஆதரவின்றிக் கொடுக்கலாமா? சிச்சீ! சிறிய செயலிது' என்று பாரதியை மேற்கோள் காட்டிக் கோபித்தார் தமிழாகரர் முனைவர் சாமி.தியாகராஜன் அவர்கள்.

'ஓட்டு மட்டுமே அரசியல்வாதிக்கு புரியும் மொழி. அது மூலமாகப் பேசினால் தான் நம் போராட்டத்துக்கு வெற்றி கிட்டும்' என்ற உண்மையைப் போட்டுடைத்தார் பாஜக தலைவர் திரு.ஹெச்.ராஜா.

'மணிமண்டபம் கேட்டவர்கள் எதிர் முகாமுக்கு வாக்களிப்பதால் நம் எதிர்ப்பு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்' என்று தற்காலத் தமிழக அரசியலைக் கிண்டலடித்த போதும், 'மணிமண்டபம் நிறுத்தப்படும் வரை ஓயாது போராடுவோம்' என்றும் அறிவித்தார் பாஜக தலைவர் திரு. இல.கணேசன் அவர்கள்.

'காயிதே மில்லத் பெயரை மாற்றியது போலவே இந்த மணிமண்டபம் அமைவதை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடுவோம்' என்று அறிவித்தார் பாஜக மாநிலத் தலைவர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள்.

'கிராமம் கிராமமாகச் சென்று மக்களைத் திரட்டிப் போராடுவதே இந்த அவமானத்தைத் துடைக்க வழி. அதற்கு அனைவரும் தயாராகுங்கள்' என்று அறிவுறுத்தினார் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள்.

தலைவர்கள் அனைவரும் தத்தம் உரையில் பலவிதமான ஆலோசனைகள் வழங்கினர். ஹைதர் அலி-திப்பு சுல்தானுக்கு தமிழக அரசு மணிமண்டபம் எழுப்புவதை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் பல தளங்களில் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினர்.

நாட்டுப்பண் இசைத்து விழா நிறைவுற்றது.

நன்றி ; அருண் பிரபு

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.