இஸ்ரத்ஜஹான் என்கவுன்ட்டர் விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை குற்றம்சாட்டுவது ஒன்றே சி.பி.ஐ.,யின் நோக்கமாக இருக்கிறது என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் (பா.ஜ.க) ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது.

கடந்த 2004-ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த என்கவுன்ட்டரில் பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் லஷ்கர்-இதொய்பா பயங்கர இயக்கத்தைச்சேர்ந்த பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில் அந்த இயக்கத்துக்கு உள்ள தொடர்புகுறித்தும், என்கவுன்ட்டரில் இறந்த இஸ்ரத் ஜஹானுக்கும், ஜாவித்ஷேக், அம்ஜதலி அக்பரலி ராணா மற்றும் சீஷன் ஹோகர் உள்ளிட்டோருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்தும் சி.பி.ஐ தாக்கல்செய்த குற்றப்பத்திரிக்கையில் இடம்பெறவில்லை. இது குறித்து ஏன் சிபிஐ விசாரணை நடத்தவில்லை?

என்கவுன்ட்டரில் இறந்த இஸ்ரத் ஜஹான் மற்றும் ஜாவித்ஷேக் ஆகியோரை தனது இணையதளத்தில் தியாகிகளாக அந்த தீவிரவாத அமைப்பு சித்திரித்துள்ளது.

இது குறித்தெல்லாம் விசாரணை நடத்தாமல், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை மட்டும் குறிவைத்து அவதூறுபரப்பும் செயலில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது.

இதற்கு பின்புலமாக காங்கிரஸ் கட்சி உள்ளது. நரேந்திர மோடி மீது களங்கம் கற்பிக்க முயல்கிறது காங்கிரஸ் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.