நரேந்திரமோடி பிரதமராக 32 சதவீதம் பேர் ஆதரவு எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமராக 32 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று ஆங்கில வார இதழ் ஒன்று நடத்திய, கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

பா.ஜ.க கூட்டணிக்கு 197 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 184 இடங்களும் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவிதம் 37.2 சதவீதத்தில் இருந்து 31.7 சதவீதமாக குறையும் . பாஜக கூட்டணியின் வாக்குவிகிதம் 23.3 சதவீதத்தில் இருந்து 26.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது

32 சதவீத மக்கள் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடியைத்தொடர்ந்து மன்மோகன் சிங்குக்கு 15 சதவீதம்பேரும், ராகுல் காந்திக்கு 13 சதவீதம்பேரும் ஆதரவு அளித்துள்ளனர். சோனியாவுக்கு 8 சதவீதம்பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாஜகவில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்று கேள்விக்கு 56 சதவீதம் பேர் மோடியை குறிப்பிட்டுள்ளனர். ஆகமொத்தத்தில் நரேந்திர மோடி பிரதமர் வேட்ப்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் இந்த 32 சதவித ஆதரவு 230 தொகுதிகளை பெற்றுத்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Leave a Reply