அத்வானி ஆர்எஸ்எஸ். தலைவர்களை சந்தித்து ஆலோசனை  பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி நாகபுரியில் ஆர்எஸ்எஸ். தலைவர்களை வெள்ளிக்கிழமை சந்தித்துப்பேசினார்.

தில்லியிலிருந்து காலையில் நாகபுரிபுறப்பட்ட அத்வானி நேராக

ஆர்எஸ்எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி போன்றவர்களுடன் அத்வானி ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் அத்வானி பேசியதாவது : எனது இந்தசந்திப்பு பா.ஜ.க.,வுக்கும், நாட்டுக்கும் நல்லபலனை அளிக்கும். நாடாளுமன்றத்துக்கும், ஐந்தாறு மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் விரைவில் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்த சந்திப்பின் போது நிகழ்ந்த ஆலோசனைகள் தேசியஅளவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த உதவியாகஇருக்கும். நான் பா.ஜ.க.,வின் உறுப்பினராக இருந்த போதும், சித்தாந்த அடிப்படையில் எனது 14 வயதில் இருந்தே ஆர்எஸ்எஸ். அமைப்புடன் தொடர்புவைத்திருப்பவன். அந்தவகையில் எங்களிடையே ஆலோசனைகள் தொடரும் என்றார் அத்வானி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.