உ.பி.,யில் சாதி ஊர்வலங்களுக்கு உடனடி தடை உ.பி.,யில் மாநிலத்தில் சாதி ஊர்வலங்களுக்கு உடனடி தடைவிதித்து அதிரடி தீர்ப்பை தந்திருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

உத்தரபிரதேசத்தில் லோக்சபா தேர்தலைமுன்னிட்டு 38 தொகுதிகளில் இருக்கும் பிராமணர்களின் வாக்குகளைக் கவரும்வகையில் பிராமணர் மாநாடுகளை பகுஜன்சமாஜ் கட்சி நடத்தியது . லக்னோவில் நடந்த மாநாடு மற்றும் பேரணியில் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி கலந்துகொண்டார்.

இதேபோன்று சமாஜ்வாடி கட்சியும் பிராமணர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் மாநாட்டை நடத்தியது. இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் மோதிலால்யாதவ் என்பவர் சாதிமாநாடு, ஊர்வலங்களை தடைசெய்யக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

இம்மனு விசாரித்த நீதிபதிகள் உமாநாத்சிங், மகேந்திர தயாள் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சாதிமாநாடுகள், ஊர்வலங்களுக்கு அதிரடியாக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர். இந்தவழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 25ந் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.