மத்திய அரசின் தூய்மை பிரச்சார திட்டத்தின்கீழ் 2019 ம் ஆண்டுக்குள் மகாராஷ்டிரா மாநிலத்தில் 56 லட்சம் கழிப்பறைகளை கட்டுவதற்க்கு முடிவு செய்யப் பட்டுள்ளது.

திட்டம் நிறைவுபெரும் போது, மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஒருகழிப்பறை வசதியை பெற்றிருக்கும். இதுகுறித்து பாஜக தலைவர் மராத் வாடா கூறுகையில் தனிப்பட்ட கழிப்பறைகள் கட்டுவதற்கான நிதி உதவியை மத்திய மற்றும் மாநில அரசு ரூ 4,000 – 12,000 என அதிகரித்துள்ளது. மேலும், கிராமப்புற சுகாதாரத்தில் உறுதியளிக்கும் வகையில் "தூய்மை தூதர்கள்" ஆக பெண்கள் கிராமளவில் நியமனம் செய்யப் படுவார்கள் என கூறினார்.

Leave a Reply