வேதம் கண்ட விஞ்ஞானம் Part 1 சனாதன தர்மம் என்பது தத்துவங்களாலும் மனோவியலாலும் அறிவியலாலும் உருவாகியகோட்டை. வேதங்கள், செய்யுள்கள், புராணங்கள், இலக்கியங்கள நீதி நூல்கள். மற்றும் சாஸ்திரங்கள் என்று இந்து மதத்தின் சொத்துக்கள் ஏராளம்.

 

காதல்,காமம், நட்பு என இந்துதர்மம் கைவைக்காத துறையோ விஷயமோ இல்லை. அத்தனையும் வாழ்க்கைகு ஏதுவான அஸ்திவார திரட்டுக்கள். அந்தவகையில் வேதம் கண்ட விஞ்ஞானம் என்ற இந்த தொடரை உங்களுக்கு தொகுத்து வழங்க கடமை பட்டுள்ளேன் .அந்த வழியில் இந்த தொடரின் முதலாவதுபதிவை வானியல் என்னும் தலைப்பில் தருகின்றோம்

 

பூமியின் வடிவம்பற்றி பல காலமாக பல தரப்பட்ட இனங்களுக்கும் மதங்களுக்கும் மத்தியில் சச்சரவுகளும் பிழையான கருத்து பரிமாறல்களும் இருந்துவந்துள்ளன. முடிவில் 18 மற்றும் 19 நூற்றாண்டிலேயே இதற்க்கான விடையை விஞ்ஞானம் கண்டு பிடித்தது. அதாவது பூமியானது கோள வடிவமானது என்றும் அது தன்பாதையில் உறுதியாக உள்ளது என்றும் விஞ்ஞானம் கூறியது .ஆனால் இதேகருத்தை நம் இந்து முன்னோரான பாஸ்கர ஆச்சார்யா ஏற்கனவே தனதுநூலில் தெள்ளதெளிவாக கூறிவிட்டார் என்பது ஆச்சரியமே

11ம் நூற்றாண்டில்_வாழ்ந்த பாஸ்கர ஆச்சார்யா லீலாமத் என்ற நூலில் லீலாவதி என்ற சிறுமி கேட்டகேள்விக்கு பின்வருமாறு பதில் தருகிறார். "உனது கண்கள் எதை பார்க்கிறதோ அவையாவும் உண்மையல்ல. நீ பார்ப்பதுபோல பூமி தட்டையானது அல்ல. அது கோள வடிவமானது. ஒரு பெரியவட்டத்தை வரைந்துவிட்டு அதன் சுற்றளவில் நான்கில் ஒருபங்கில் தூரத்தில் நின்று பர்த்தால் அது நேர்கோடகவே தெரியும். அதுபோலவே பூமியும் தட்டையானது அல்ல. அது கோளமானது" என்றார்

இதேபோல 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்யப்பட்டர் எழுதிய ஆர்யப்பட்டம் எனும் நூல் லத்தின்மொழியில் மொழி ‪பெயர்க்கப்பட்டது.மேலைநாட்டு வனியலாளர்களை தூக்கிப் போட்ட நூல் இது. கிரகணத்துக்கான காரணங்களை ஆர்யப்பட்டர் தனது நூலில் மிக தெளிவாக விளக்கியிருந்தார்.

"சடயாட்டி சசி சூர்யம் சகினாம் மகதிக பூசார்ய………………………" நூல் ஆர்யப்பட்டம் கோல் பாதம் சுலோகம் 39

இதன் பொருள்: சூரியன் சந்திரனை மறைக்கும்போது சூரியகிரகணம் தோன்றுகின்றது. பூமி சந்திரனை மறைக்கும்போது சந்திர கிரகணம் தோன்றுகின்றது. தர்மத்தின் பாதையில் மேலும் அவர் கிரகணங்கள் எப்போதெல்லாம் தோன்றும் என்றும் பூமி சூரியனைசுற்ற 365 நாட்கள் 12 மணி 30 வினாடிகள்செல்லும் என்றும். பூமி தன்னத் தானே சுற்ற 23 மணி 56 நிமிடம் 4.1 வினாடிசெல்லும் எனவும் அப்போதே துள்ளியமாக கூறிவிட்டார்.என்பது ஆச்சரியமான தகவல் தான்.

அத்துடன் இந்திய மொழியில் ஜாக்ரபி என்பது பூகோள சாஸ்திரம் என்பது பொருள்.பூகோளம் என்பதிலிருந்தே பூமி கோள வடிவம் என்பதை நம் முன்னோர்கள் கூறிவிட்டனர். இவற்றை பார்க்கும்போது நமக்கும் இந்து அல்லது இந்தியன் எனும் இறுமாப்பும் கர்வமும் ஏற்படுகின்றதல்லவா

தொடரும்,,,,,,,,,,,

One response to “வேதம் கண்ட விஞ்ஞானம் Part 1”

  1. Nat says:

    Excellent

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.