மோடியை  மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறுவதற்கு காங்கிரசுக்கு தகுதி இல்லை குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரம்தொடர்பாக முதல்வர் நரேந்திரமோடி நேற்று விளக்கம் தந்தார் . அப்போது அவர் கலவரத்தை தடுப்பதற்க்கு தனது அரசு போதியநடவடிக்கை எடுத்தது , எனது காரில் ஒருநாய்க்குட்டி அடிபட்டு இறந்தால் கூட வருத்தப்படுபவன் என்று கூறினார் .

இந்நிலையில் கலவரம்தொடர்பாக மோடியின் கருத்து சிறுபான்மையினரை அவமதிப்பதாக காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட போலி மதச்சார்பு கட்சிகள் திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன .

இதுதொடர்பாக பாஜக.,வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

குஜராத்தில் கலவரம் ஏற்பட்ட போது, அதனை தடுக்க மோடியின்நிர்வாகம் என்னென்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அத்தனையையும் எடுத்தது. மோடி கடுமையான , வலுவான நடவடிக்கைகளை எடுத்தார். அத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக, எதிர் காலத்தில் அதை போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை.

மாநில அரசு சிறுபான்மை சமுகத்திற்கு எதிராக பாரபட்சம் காட்ட வில்லை. வளர்ச்சியின்பயன்களை அங்குள்ள ஒவ்வொருவரும் அனுபவித்தனர்.

மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறுவதற்கு காங்கிரசுக்கு தகுதிகிடையாது. பா.ஜ.க .,வின் எந்த தலைவர்களையும் மன்னிப்பு கேட்கும்படி அவர்கள் கூறமுடியாது. அவர்களுக்கு எதிரான வழக்குகளின் பட்டியல் மிகநீளமாக உள்ளது. அவர்களை சமாளிக்கும் நடவடிக்கைகளில் எங்கள்கட்சி கவனம்செலுத்தும். நாங்கள் ஓட்டுவங்கி அரசியல் நடத்தவில்லை. காங்கிரஸ் தான் ஓட்டுவங்கி அரசியலை விடவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.