தமிழகம் எங்கும் வரும் 22 ம் தேதி பந்த் சேலத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி. ரமேஷ் (52), வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் இதற்க்கு பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஜூலை 22ம் தேதி தமிழகம் முழுவதும் பந்த் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். .

சேலம் மரவனேரி முதலாவது குறுக்குத்தெருவில் குடும்பத்துடன் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி. ரமேஷ் வசித்துவந்தார். வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் உணவகத்துக்கு சென்று விட்டு வீடுதிரும்பினார். மனைவி, குழந்தையை வீட்டில் விட்டு விட்டு, தனது வாகனத்தை மரவனேரி 2ஆவது குறுக்குத்தெருவில் உள்ள அலுவலகத்தில் விடுவதற்குச்சென்றார்.

அப்போது ரமேஷின் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த மர்மநபர்கள், அவரைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலைசெய்தனர். ரமேஷ் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை இரவு 10 மணிக்கு அக்கம்பக்கத்தினர் பார்த்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல்கொடுத்தனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் மேலும் இதனை கண்டித்து தமிழகம் எங்கும் வரும் 22 ம் தேதி பந்த் நடத்தப்படும் என்றும் இதற்க்கு கட்சி பேதம் இன்றி அனைவரும் ஒத்துளைப்பு தரவேண்டும்
தமிழகத்தில் இந்து அமைப்பைச்சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இது மிகவும் விபரீதமானது. தமிழக அரசு உடனே குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்தநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய சூழ்நிலை நீடித்தால், இந்து அமைப்பைச்சேர்ந்தவர்கள் ஆயுதம் ஏந்தியே நடமாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது நல்லபோக்கு அல்ல.

இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் – என்று கூறினார்.

Leave a Reply