பேரவை தேர்தலில் அ,தி,மு,க கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்று , இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் தெரிவித்துள்ளார் .

  திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

இந்துக்களின் நலன், உரிமை, பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும்

கட்சிக்குத்தான் பேரவை தேர்தலில் இந்து முன்னணி ஆதரவு அளிக்கும். அ.தி.மு.க கூட்டணியில் இந்து-விரோத சக்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே அக்கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு அளிக்க போவதில்லை.

பள்ளிகளில் அனைத்து-மாணவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால் இப்போது சிறுபான்மையின மாணவர்களுக்கு அதிகசலுகைகளும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகின்றன. இந்து மாணவர்களுக்கு சலுகைகளோ, முக்கியத்துவமோ வழங்கப்படுவது இல்லை.

இதன் பாதிப்பு வரும் பேரவை தேர்தலில் எதிரொலிக்கும். இந்துக்கோயில் சொத்துகலை ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும், இந்துவிரோத நடவடிக்கைகளுக்கும் மத்திய மற்றும் மாநிலஅரசுகள் தொடர்ந்து ஆதரவு-தெரிவித்து துணை போகின்றன.

திருநெல்வேலி பேட்டையில் அரசு-அதிகாரிகளால் அகற்றப்பட்ட பூலுடையார்சாஸ்தா கோயிலை அரசு மீண்டும் அமைத்து தர வேண்டும்.

பாபநாசம் , விக்கிரமசிங்கபுரம்,கோயிலுக்கு சொந்தமான 30ஏக்கர் நிலத்தை தனியார் பள்ளிகள் ஆக்கிரமித்துள்ளன. அந்த நிலங்களை அரசு உடனடியாக மீட்க வேண்டும்.

இதேபோல, மாநிலத்தில் இருக்கும் பல கோயில்களின் சொத்துகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது . நிலங்கள் ஆக்கிரமிக்கபடுகின்றன. இதை கண்டித்து மிகபெரியளவில் போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு ராம. கோபாலன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.