வெள்ளையப்பனையும்,  ஆடிட்டர் ரமேஷையும் கொன்றது ஒரே கும்பல்தானா பா.ஜ.க.,வின் மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷை கொலை செய்த கும்பல்தான் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பனை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது .

சேலம், மரவனேரி முதல்கிராசை சேர்ந்தவர் ஆடிட்டர் ரமேஷ், 52. பா. ஜ.க.,வின் , மாநில பொதுச்செயலரான, இவர் அலுவலகம், மரவனேரி இரண்டாவது கிராசில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, குடுப்பத்தினருடன் சேலம், ஐந்துரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில், இரவு சாப்பிட்டுவிட்டு காரில் வீடு திரும்பினார். அப்போது, அவர்மட்டும், அலுவலகம் அருகே இறங்கி, 30 அடி தூரம் உள்ள அலுவலகத்துக்கு, நடந்துசென்றார். அலுவலக மேல்மாடிக்கு சென்றார். அப்போது அங்குவந்த 6 பேர் கொண்ட கும்பல், அங்கு பணியிலிருந்த, வாட்ச்மேன் ஜெய ராமனை, 75, கத்தி முனையில் மிரட்டி, சப்தம்போடாமல் இருக்கும்படி செய்துவிட்டு, ரமேஷ், கீழே வருவதற்காக காத்திருந்தனர். இரவு, 9:20 மணிக்கு, கீழே இறங்கிவந்த ஆடிட்டர் ரமேஷை, மறைந்திருந்த 6 பேரில், 2 பேர் கத்தி, அரிவாளால் வெட்டிச்சாய்த்தனர். அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். பின் அந்தகும்பல், சாலையில் வெளியில் இருந்த, இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பியுள்ளனர்.

கடந்த, 1ம் தேதி, வேலூரில், இந்துமுன்னணி நிர்வாகி வெள்ளையப்பன் வெட்டிக்கொலை செய்யப்பட்டது போல், ஆடிட்டர் ரமேஷும் கொலை செய்யப் பட்டுள்ளார். இந்த 2 கொலைகளும், ஒரேமாதிரி நடந்துள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது . வெள்ளையனின் உடலில், 22 வெட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. அதேபோல் ஆடிட்டர் ரமேஷ் உடலிலும், 24 வெட்டுக்கள் இருந்ததோடு, உடலில் வெட்டப்பட்ட ஆழமும், அளவுகளும் ஒரேமாதிரியாக இருந்துள்ளது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

இதில், ஆடிட்டர் ரமேஸ்க்கு, தொழிலிலோ, வியாபாரத்திலோ, குடும்பத்திலோ எந்த வித பிரச்னையும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.