· சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், ”எங்கள் ஆடிட்டர் ரமேஷ்ஜி படுகொலையைகண்டித்து காங்கிரஸ் ஞானதேசிங்கன்,பாமக ராமதாஸ்,வி.சி திருமாவளவன், வைகோ, சிபிஐ தா.பாண்டியன்,சிபிஎம் டி.கே ரங்கராஜன்,பழ நெடுமாறன் உட்பட்ட அணைத்து தலைவர்களும் பேசியதற்க்கு மனமார்ந்த நன்றிகள்.

திங்கள்கிழமை முழுஅடைப்பு யாருக்கும் எதிரானதல்ல. அரசியல் நாகரீகம், மதநல்லிணக்கம் வேண்டு மென கருதும் தமிழகமக்கள் ஜனநாயகத்திற்கு எதிரான இந்தகொலையை கண்டித்து காட்டும் எதிர்ப்பாக இருக்கவேண்டியே இந்த முழு அடைப்பு.கடந்த 9 மாதங்களில் 4வது படுகொலை இது.

இந்துதலைவர்கள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர். கொலைநடந்த இடத்தில் மறுநாள் காலை ஒரு கான்ஸ்டபில்கூட இல்லை.நாலுமணி நேரம் கழித்துதான் மோப்பநாய் நாமக்கலில் இருந்து வருகிறது.

சேலத்தில் மோப்பநாய் இல்லையாம். இப்படி காவல் துறை இருந்தால் எந்தகுற்றத்தை தடுப்பார்கள்? இப்பகுதி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மிகதாமதமாக கொலை நடந்த இடத்திற்குவருகிறார்.

இப்படி இருந்தால் தடையங்கள் அழியவாய்ப்பு ஆகாதா? கேட்டால் டி.சி சொல்கிறார் ‘உங்கள்தொண்டர்கள் எங்களை வேலைசெய்ய விடவில்லை’ என்கிறார். இதைசொல்லவா நீங்கள் இருக்குறீர்கள்?

அப்போ காவல் துறை எதற்கு? ரமேஷ்ஜி உடலை பார்த்துவிட்டு கதறி ரோட்டிற்குவந்து அழுதுள்ளார் அவரின்மாமியார். அப்பொழுது இரண்டுகாவலர்கள் டூவீலரில் போக அவர்களிடம் முறையிட்டுள்ளார்.’போ மா உனக்கு வேலையில்லையா?!’ என்று கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர்.

காவல்துறைக்கு கொஞ்சம்கூட ஈரம் இல்லை. பிணம்காக்க தான் காவல் துறை இருக்கிறது வேறொன்றுக்கும் பிரயோஜனம் இல்லை. இந்த படுகொலையில் அமைப்புகளுக்கு தொடர்புண்டு. எந்த அமைப்பு என்றுதெரியாது. அத்வானிஜி போனில் பேசினார். வரும் ஆகஸ்ட் 1 தேதி சேலத்தில் அஞ்சலிகூட்டம் வைத்துள்ளோம் அதற்கு அத்வானி ஜி வருவதாக கூறியுள்ளார் .மேலும் பல தேசியதலைவர்கள் வருவார்கள்.

மோடி அடிக்கடி தொலைபேசிசெய்து ‘என்ன நிலவரம்?’ என்று விசாரிக்கிறார். இந்தகாலத்தில் ஒரு தொண்டனுக்காக குமுறும் தலைவர் அவர்தான். அதனால்தான் அவர் உயர்ந்த தலைவர். மற்றபடி ராஜராஜேஸ்வரி தீக்குளித்ததை அறிகிறேன். யாரும் இவ்வாறு செய்ய வேண்டாம்…ஒரு தனிமனிதருக்காக விலைமதிப்பில்லாத பாஜக வினரின் உயிர் போககூடாது. கட்சிக்காக, நாட்டுக்காகதான் நம் உயிர் போகவேண்டும் எனவே யாரும் இவ்வாறு செய்யவேண்டாம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.