பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:– மத்தியில் ஆளும்காங்கிரஸ் அரசு மதவாத அமைப்புகள், பயங்கரவாதசெயல்களில் ஈடுபட்டாலோ, பாகிஸ்தான்

தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்தாலோ அதை கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்தது ஒரு காலம். அதன்பிறகு தீவிரவாதிகள் மீது மென்மையானபோக்கை கடைப்பிடித்தது. இதுவே காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம்.

இப்போது மதவாத, தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கும்போக்கை கடைப்பிடிக்கிறது. உதாரணமாக பாகிஸ்தானில் உருவான இந்தியமுஜாகிதீன் அமைப்புக்கு காங்கிரஸ் வக்காலத்து வாங்குகிறது.

குஜராத்தில் நரேந்திரமோடியை கொல்லவந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சிபிஐ. மூலம் அடையாலம் காட்டப்பட்ட ஒரு இளம்பெண் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார். இப்போது அதையே போலிஎன்கவுண்டர் என சொல்லி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது .

பா.ஜ.க.,வை பொறுத்தவரை எப்போதுமே வளர்ச்சி திட்டங்களைத்தான் சொல்லிவருகிறது. ஆனால் காங்கிரஸ் வாக்குவங்கிகளை நினைத்து செயல்படுகிறது.

இந்து இயக்கங்களைசேர்ந்த தலைவர்கள் 1982 முதல் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், தாக்குதலுக்குள்ளாகியும் இருக்கிறார்கள். சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பா.ஜ.க விடுத்த வேண்டுகோளை ஏற்று கடையடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்புநல்கிய வியாபாரிகள், பொதுமக்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்ட அரசியல்கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

ரமேஷ்படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு விசேஷபுலனாய்வு குழுவை அமைத்து உடனடியாக விசாரணைதொடங்க உத்தரவிட்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கை ஆறுதல்தருகிறது. உண்மையான குற்றவாளிகளும். அதன் பின்னணியும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெறும் வரை எங்கள்போராட்டம் தொடரும்.

ஆடிட்டர் ரமேஷ் கொலைதொடர்பாக விசாரித்து கட்சி மேலிடத்துக்கு அறிக்கை கொடுப்பதற்காக பா.ஜ.க.,வின் அகில இந்திய செய்திதொடர்பாளர்கள் பிரகாஷ் கவுடேகர், நிர்மலா சீதாராமன் மற்றும் ஹெக்டே எம்.பி. உள்ளிட்ட 3 பேர்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தகுழுவினர் 25 மற்றும் 26ந் தேதிகளில் கோவை, வேலூர், சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நேரடியாக விசாரணை நடத்துகிறார்கள்.

வருகிற 1–ம் தேதி சேலத்தில் நடைபெறும் இரங்கல்கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்கிறா என்றார் .

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.