உத்தமனை கொன்று  உயிரை பறித்துள்ளனர் ஆடிட்டர் ரமேஷ் யாரிடத்திலும் பகைகொல்லவில்லை. யாரிடத்திலும் அவர் அதிர்ந்துகூட பேசமாட்டார். என்னுடன் நெருங்கிபழகியவர். அந்த உத்தமனை கொன்று அவரது உயிரை பறித்துள்ளனர் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சேலம் வந்து பாஜக மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினார். ரமேசின் மனைவி, மகள் மற்றும் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

ஆடிட்டர் ரமேஷ் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளார். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இல்லாமல் அவரதுமனைவி, ஒரேமகள் மற்றும் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீண்டநாட்களுக்கு பின்னர் ரமேஷ், அவரது மனைவி, மகளை அழைத்துகொண்டு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு திரும்பியிருக்கிறார்.

பிறகு ரமேஷ் அவரது அலுவலகத்திற்கு சென்றபோது அவரை தாக்கி கொலைசெய்துள்ளனர். 24 இடங்களில் அவருக்கு வெட்டுக்காயம் இருந்துள்ளது. அவர் யாரிடத்திலும் பகைகொல்லவில்லை. யாரிடத்திலும் அவர் அதிர்ந்துகூட பேசமாட்டார். என்னுடன் நெருங்கி பழகியவர். அந்த உத்தமனை கொன்று அவரது உயிரைபறித்துள்ளனர்.

இந்தநிலை அடியோடு கிள்ளி எறியப்படவேண்டும். வடநாட்டில் கலவரம் ஏற்பட்டபோது கூட தமிழகத்தில் கலவரம் இல்லாமல் அமைதிநிலவியது. ஆனால் கடந்த 7 அல்லது 8 மாதங்களில் இந்துமதத்தை பற்றி பேசி வருபவர்கள் படுகொலைசெய்யப்பட்டு வருகிறார்கள்.

வேலூரில் டாக்டர் அரவிந்த் மற்றும் இந்துமுன்னணி வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தசம்பவம் இனி தொடரக்கூடாது. தகுந்தபாதுகாப்பு தரப்படவேண்டும்.

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுகுழு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் கொலையாளிகள் யார் என கண்டுபிடித்து அவர்களுக்கு கடும்தண்டனை பெற்றுத்தரவேண்டும்.

ரமேசின் படுகொலைக்கு பாஜக மாநில செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பந்த்திற்கு அழைப்புவிடுத்து இருந்தார். இதை ஏற்று அனைத்துபகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்திருந்தனர். மனிதநேயம் தமிழகத்தில் தழைத்தோங்க வேண்டும். சமூகநல்லிணக்கம் தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.