ஜிஹாத் என்ற பெயரில் சிறுவர்களை தற்கொலை படையாக மற்றும்  தீவிரவாதிகள்  பாகிஸ்தான் தீவிரவாதிகள் 'ஜிஹாத்' (புனித போர்) என்றபெயரில் அனாதை சிறுவர்களை தற்கொலைபடை தீவிரவாதியாக மாற்றிவருவதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனை பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத இயக்கங்கள் மறுத்துவருகின்றன.ஆனால்

மேற்கண்ட குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை ஆப்கானிஸ்தான் நாட்டைசேர்ந்த விருதுபெற்ற இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு குறும்படத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.

8 வயது சிறுவர்களைகூட சாக்லேட் வாங்கிதருவதாக கூறி தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதை நஜீபுல்லா குரைஷி என்ற அந்தஇயக்குனர் தயாரித்துள்ள குறும்படம் தோலுரித்து காட்டுகிறது.வறுமையில்வாடும் அனாதை சிறுவர்களாக தேர்வுசெய்து இடுப்புபெல்ட் மற்றும் உள்ளாடைக்குள் வெடிகுண்டை கட்டிச்சென்று வெடிக்கவைக்கும் பயிற்சி தலிபான்களால் அளிக்கப்படுவதை இந்த குறும் படம் ஆணித்தரமாக பதிவுசெய்கிறது.சாக்லேட் மற்றும் செலவுக்குபணம் தருவதாக கூறி ஆசைகாட்டி சிறுவர்களை அழைத்துசெல்லும் தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை இயக்குவதை கற்றுதருகின்றனர்.

இவர்களிடம் இருந்து தப்பியோடி வந்த நியாஸ் என்ற சிறுவன், 'எனக்கு 8 வயதானபோது ராணுவரெய்டில் எனது பெற்றோர் இறந்துவிட்டனர்.அப்போது என்னை கடத்திசென்ற தலிபான் தீவிரவாதிகள் தின்பதற்கு நிறைய இனிப்புபண்டங்களை தந்தனர்.வெடிகுண்டுகள் பொருத்திய உள்ளாடையை எனக்கு அணிவித்து ஒருபகுதியில் இருந்த சோதனை சாவடி அருகே என்னை மனிதவெடிகுண்டாக களமிறக்கினர்.ஆனால், அவர்கள் கூறியபடி செய்யாமல் அங்கிருந்து தப்பிய நான் தற்போது அனாதை ஆசிரமத்தில் தங்கியுள்ளேன்' என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

இது போல் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வெடிகுண்டுதயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதையும் இந்தகுறும்படம் ஆவணப்படுத்துகிறது.இந்த குறும்படம் மேற்கத்திய நாடுகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.