தேச காதலர்க்கு , கலாச்சார காவலர்களுக்கு இந்த மண்ணில் இடம் இல்லையா? தேச காதலர்க்கு , கலாச்சார காவலர்களுக்கு இந்த மண்ணில் இடம் இல்லையா! பாதுகாப்பு இல்லையா!!. தேச பற்றற்றவர்களுக்கும்! தேச விரோதிகளுக்கும்!! பிரிவினை வாதிகளுக்கும் தான்!!! இந்த மண்ணில் இடம் உண்டோ? பாதுகாப்பு உண்டோ?. அதனால் தான் ஆடிட்டர் ரமேஷ் என்ற அற்புத மனிதரை பாஜக இழந்து விட்டதோ? , பாரதம் இலந்து விட்டதோ?

பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடியவர். அமைதி குணத்துக்கு சொந்தக்காரர். கல்வியால் உயர்ந்தவர், கட்டப்பஞ்சாயத்து செய்து லட்சங்களை குவிக்கும் அரசியல் வாதிகளின் மத்தியில் தான் கற்றரிந்த கல்வியை கொண்டு கூட லச்சங்களை , கோடிகளை குவிக்காமல் தமிழகத்தில் தாமரையை மலர செய்வதையே லட்சியமாக கொண்டவர். கலாச்சார பாதுகாவலர், சுதேதி கொள்கைகளை உயிரேன நினைப்பவர். ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை .பயங்கர வாதிகளின் கொலைவெறி தாக்குதலில் இன்று அவரை நாம் பறிகொடுத்து விட்டோம்.

ஒன்று இரண்டல்ல இதுவரை நாம் 130க்கும் அதிகமானவர்களை பறிகொடுத்துள்ளோம் . கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 6 படுகொலைகள். ஜூலை 4, 2012: நாகப்பட்டினத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி. அக்டோபர் 23, 2012: வேலூரில் பாஜக மருத்துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி. மார்ச் 19, 2013: பரமக்குடி நகராட்சி பாஜக முன்னாள் கவுன்சிலர் முருகன். ஜூலை 1, 2013: வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன்.ஜூலை 8, 2013: ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு.ஜூலை 19, 2013: சேலத்தில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ்.

மேலும் அரிவாளால் வெட்டப்பட்டு அதிர்ஷ்ட்ட வசமாக உயிர் பிழைத்தவர்கள்: நாகர்கோவிலில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி, மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்டச் செயலாளர் ஆனந்த், ஊட்டியில் இந்து முன்னணி நிர்வாகி ஹரி ஆகியோர்.

 இப்படியாக பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் , படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கைதான் உயர்ந்து கொண்டு செல்கிறதே தவிர. கொலை செய்து பிடிபட்ட, தண்டிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை மட்டும் தொடங்கிய இடத்திலேயே தான் நிற்கிறது . தமிழகத்தில் கூலிக்கு ஆள் கிடகைக்கவில்லை , ஆனால் கூலிப்படைக்கோ பஞ்சம் இல்லை. என்றைக்கோ தண்டிக்க படவேண்டிய! சுட்டுத்தள்ளப்பட வேண்டிய!!, தேச விரோதிகள் எல்லாம் இன்றும் சுதந்திரமாக சுற்றி திரிவதால்தான். இன்னும் எத்தனையோ வருடங்கள் வாழவேண்டிய தேச நேசர்களை எல்லாம் நாம் வரிசையாக இழந்து கொண்டிருக்கிறோம்.

காவல்துறையும் , சட்டமும் தன்கடமையை சரியாக செய்வதில்லை . இதை மக்களிடம் உரக்க கூறவேண்டிய ஊடகமோ கால் கட்டைவிரலில் அடிபடும் நடிகர் , நடிகைகளுக்கும் . காதல் தோல்வியில் உயிர் இழக்கும் இளவரசன் , இளவரசிகளுக்கும் தான் ஊளையிடுகிறது , முதல்பக்கத்தில் இடம் தருகிறது.

அந்நியனிடம் இருந்து தேசத்தை காக்க எல்லையில் தன் உயிரை விடும் போர் வீரனுக்கோ, அந்நிய கலாச்சாரத்தையும் , அந்நிய பொருட்களையும் எதிர்த்து போராடி உயிர் விடும் தேச பக்தர்களுகோ ஊடகங்களில் கிடைப்பது என்னவோ கடைசி இடம்தான்.

இதே நிலை தொடர்ந்தால் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தன்னை தர்க்காத்து கொள்ள ஆயுதம் ஏந்தி நடமாட வேண்டிய சூழ்நிலை வரும் என்ற பொன்னாரின் வாக்கு உணணர்ச்சி பிழம்பில் வெடித்த வாக்கேயன்றி பொன்னான வாக்கன்று . எதிர்காலத்தில் இது பொன்னான வாக்காக மாறும் சூழ்நிலை வராது என்று நாம் நம்பிக்கைகொள்வோம்.

தமிழ்தாமரை V.M.,வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.