மலேசியா ஹிந்துக்களுக்கு கிடைத்த நீதி  சில வருடங்களாக மலேசியாவில் பரபரப்பாக பேச பட்ட வழக்கு இது… கணவன் மனைவி ஹிந்து தமிழர்கள். ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தது.. மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். சில வருடங்கள் சென்று இருவருக்கும் பிரிவு. விவாகரத்து செய்தார்கள். குழந்தைகள் தாயிடம். சில நேரங்களில் தந்தையிடம்..

இப்படி இருக்கையில்.. அந்த தந்தை இஸ்லாமிய மதத்தில் மாறினார். அது அவர் உரிமை.. அதை கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை. ஆனால்…

தன மூன்று சிறு குழந்தைகளையும் முன்னாள் மனைவிக்கு தெரியாமல் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றி விட்டார். தாயின் அனுமதி இல்லாமல் தாய்க்கு தெரியாமல் சிறு குழந்தைகளையும் மதம் மாற்றி விட்டார்கள்.. அன்பு, அமைதி, சுதந்திரம் உள்ள மார்கத்தை சேர்ந்த பெரியவர்கள்.

சும்மா இருப்பாளா அந்த தாய்? ஹிந்து தாயல்லவா.. நீதிமன்றம் சென்றாள்.. இந்த வழக்கு இஸ்லாமிய சம்பந்தபட்ட வழக்கு.. அதனால், ஷரியா நீதிமன்றத்துக்கு தான் செல்லவேண்டும் என்று சிவில் நீதிமன்றம் சொல்லி விட்டது..ஆனால், இஸ்லாமியர் அல்லாத அந்த தாய் ஷரியா நீதிமன்றம் செல்ல முடியாது.. என்ன செய்யலாம்?

சட்டட்டில் உள்ள இந்த ஓட்டைக்கு என்ன என்ன தீர்வு.. பல நாட்களாக, பல அரசியல் தலைவர்கள் , மெத்த படித்த வழக்கறிஞர்கள் இஸ்லாமிய ஹிந்து கிருஸ்துவ, பௌத்த மத தலைவர்கள், அரசாங்க சார்பற்ற இயக்கங்கள் தங்களின் கருத்துக்களை சொன்னனர்.. மிகவும்.. பரப்பாக பேச பட்டது இந்த சம்பவம்.

முதல் கேள்விதான் இதுதான் . 18 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளை மதம் மாற்றலாமா? ஒரு வேலை தாயும் தந்தையும் சேர்ந்து மதம் மாறியிருந்தால்.. இதில் பிரச்சனை இல்லை.. ஆனால், தாயோ, அல்லது தந்தையோ.. இருவரில் ஒருவர் மதம் மாறி.. அடுத்தவருக்கு தெரியாமல், குழந்தைகளை மதம்மாற்றம் செய்யலாமா? இந்த பிரச்சனையில்.. தாயும் தந்தையும் ஹிந்துக்களாக இருக்கையில் பிறந்த ஹிந்து குழந்தைகள், இப்போது தந்தை இஸ்லாமிய மதம் மாறிவிட்டார் என்பதற்காக தாய்க்கு தெரியாமல் மதம் மாற்றம் செய்தது சரியா? குழந்தைகள் மேல் அந்த தாய்க்கு உரிமை இல்லையா? இங்கு பெண்களின், தாய்களின் உரிமைகள் மறுக்க படுகிறதே..

இப்படி இருக்கையில்.. மலேசியா அரசாங்கம் ஒரு புதிய மசோதா அறிமுகபடுத்த முயன்றது… தாய் அல்லது தந்தை ஒருவரின் அனுமதி இருந்தால் போதும்.. குழந்தைகளை மதம் மாற்றலாம் என்ற மசோதா அது..

வெகுண்டு எழுந்தனர்..ஹிந்து கிருஸ்துவ, பௌத்த மக்கள்.. அனைத்து மதங்களை சேர்ந்த பெரியவர்களும், அரசியல் தலைவர்களும், சமூக இயக்கங்களும் இந்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதில் மலாய் இஸ்லாமியர்களும் அடக்கம். ஆளுங்கட்சியை சேர்ந்த சில அமைச்சர்களே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.. விளைவு மசோதா மீட்டு கொள்ள பட்டது.

இப்போது இந்த ஹிந்து தாயின் வழக்கு மீண்டும் நீதிமன்றம் வந்து.. இன்று.. அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.. சிறு குழந்தைகளை.. தாயோ, அல்லது தந்தையோ.. இன்னொருவர் சம்மதம் இல்லாமல் மதமாற்றம் செய்ய முடியாது.. ஆகவே, குழந்தைகளை மதமாற்றம் செய்ததை இந்த நீதிமன்றம் தடை செய்கிறது. அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல.. ஹிந்துக்கள்தான்!

இப்படி பட்ட வழக்குகள் இன்னும் சில உள்ளன.. இந்த வழக்கை முன்னுதாரணமாக வைத்து சாதகமான தீர்ப்பு வரும்!

நீதி வென்றது சனாதனம் வென்றது.

சத்யமேவ ஜெயதே!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.