வேலுாரில், பா.ஜ., தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியதாவது: தமிழகத்தில், 570 கோடி ரூபாய், தேர்தல்கமிஷன் பறிமுதல் செய்த விவகாரத்தில், மத்திய அரசு மவுனமாக இருப்பதாகவும், மத்திய நிதி அமைச்சருக்கும் இதில்பங்குள்ளது என்பது போல, இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தபணம் வங்கியில் இருந்து வந்தது, அதற்கு போதியஆவணங்கள் இருப்பதாக, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி விசாரணை நடத்தி அறிவித்துள்ளார். அதற்குபின்பும், பொறுப்பில்லாமல் பேசிய இளங்கோவன் மீது, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மானநஷ்ட வழக்கு தொடுக்கவேண்டும். இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply