வெளிநாட்டு சிறைகளில் 5,986 இந்தியர்கள் அடைக்கப் பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளிவிவகாரத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது : வெளிநாட்டு சிறைகளில் 5,986 இந்தியர்கள் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 71 பேர் சிறைத்தண்டனை காலம் முடிந்து, இந்தியா திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.

அதிகபட்சமாக சவூதிஅரேபியாவில் 1,400 பேரும், அதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 985 பேரும், பாகிஸ்தானில் 468 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் 430 இந்தியர்களும், நேபாளத்தில் 337பேரும், மலேசியாவில் 332பேரும், குவைத்தில் 274 பேரும் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் நேபாள சிறைகளிலுள்ள 37 பேரும், மலேசிய சிறைகளிலுள்ள 20 பேரும் தண்டனைக்காலம் முடிந்து, இந்தியா திரும்புவதற்காக காத்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply