புதுடெல்லி யிலிருந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 12 வயதுசிறுவன், வங்கதேசத்திலிருந்து  தாய்நாடு திரும்பி பெற்றோருடன் சேர்ந்துள்ளார்.

சோனு என்று அழைக்கப்படும் இந்தச்சிறுவன் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்புகளுடன் தனது தந்தையின் கைகளை பிடித்தபடி வந்துசேர்ந்துள்ளார்.

தந்தை மெஹ்பூப் கூறும்போது, “நான் எனது மகனைத் திரும்பப்பெற்றேன். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

கடத்தலின் முழுவிவரம் தெரியவில்லை, ஆனால் சோனுவின் பெற்றோருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒருவர் சோனுவை 2010-ம் ஆண்டு கடத்தி பிறகு அவரை வங்க தேசத்துக்கு ஆள்கடத்தல் செய்துள்ளார்.

தென்மேற்கு ஜெசூரில் வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு சுரண்டப்பட்ட சிறுவன் பற்றி வங்க தேசத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் இந்திய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

அங்கு வீட்டுப்பணிகளில் ஈடுபட்டிருந்த போது சோனுவை துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது. பிறகு இவரை மீட்டு அங்கு குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

செவ்வாயன்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியபோது, சோனுவின் டி.என்.ஏ. மாதிரிகள் தாயாரின் டி.என்.ஏ-வுடன் ஒத்துப்போனது என்றார்.

சுஷ்மா ஸ்வராஜ், புன்னகைக்கும் சோனுவுக்கு ஆறுதல்வழங்கும் புகைப்படங்களும், சுஷ்மா ஸ்வராஜின் பாதத்தைத் தொட்டு சோனுவின் தாயார் வணங்கு வதுமான படங்களும் வெளியாகியுள்ளன.

Leave a Reply