பாட்னா தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 6பேரின் அஸ்திரையை கரைப்பதற்காக பாஜக யாத்திரையை நடத்த உள்ளது . குஜராத் முதல்வரும் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி கலந்துகொண்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினர். 100க்கும் அதிகமானோர் படு காயமடைந்தனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் அஸ்தியை கங்கையில்கரைக்க பிரமாண்ட யாத்திரைக்கு பாஜக ஏற்பாடு செய்திருக்கிறது. “அஸ்தி கலசயாத்திரை” என்று பெயருடன் பாட்னா பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து கங்கைநதிக்கு பேரணியாக செல்ல இருக்கின்றனர்.

Leave a Reply