மகாராஷ்டிர மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்மீது வருத்தத்தில் உள்ளனர். மேலும் பாஜக இனி மாநிலத்தை முன்னேற்றும் என்ற நம்பிக்கையில் அம்மாநிலமக்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.


 

மேலும் அவர் கூறும்போது முதலாவது இடத்தில் இருந்த மாநிலத்தை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் அரசு 6வது இடத்துக்கு கொண்டு சென்று விட்டது. மாநிலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து விட்டனர். எந்த வளர்சியோ முன்னேற்றமோ இல்லை என மக்கள் வருத்தத்தில் உள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்பு கின்றனர். பாஜக அரசு 6 வது இடத்தில் உள்ள மாநிலத்தை முதலாவது இடத்துக்கு கொண்டுவரும் என நம்புகின்றனர் என்று கட்காரி கூறினார்.

Leave a Reply