பிரதமர் நரேந்திர மோடி இந்தமாதம் இலங்கைக்கு செல்ல உள்ள நிலையில், வரும் 6ம் தேதி மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த நாட்டுக்கு செல்கிறார்.

2 நாள் பயணமாக செல்லும் சுஷ்மா, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே மற்றும் அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கல சமரவீரா ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடியின் பயணம்குறித்து ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி முதன் முறையாக இலங்கைக்குச் செல்கிறார். இதற்கு முன்பு கடந்த 1987-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்றார். அதன் பிறகு கடந்த 25 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.

இந்தப் பயணத்தின் போது போரினால் பாதிக்கப்பட்ட, தமிழர்கள் அதிகம்வசிக்கும் யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறு வாழ்வுப் பணிகளை பார்வையிட மோடி திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply