நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை, 20 ஆண்டுகளாக புலனாய்வு அமைப்பான ஐ.பி. கண் காணித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக புலனாய்வு அமைப்பால் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுவந்த கோப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய ஆவண காப்பகத்தில் அந்த ஆவணங்கள் தற்போது உள்ளன.

அதில், நேதாஜியின் சகோதரர் சரத் சந்திரபோஸின் மகன்கள் சிசிர் குமார்போஸ், அமியா நாத்போஸ் உள்ளிட்டோரை 1948ம் ஆண்டு முதல் 1968ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் புலனாய்வு அமைப்பு கண் காணித்து வந்தது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 20 ஆண்டுகளில், 16 ஆண்டுகள், இந்தியாவின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு இருந்தார்.

நேதாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகளையும், அவர்கள் எழுதும் கடிதங்களையும், அவர்களுக்கு வரும் கடிதங்களையும் புலனாய்வு அமைப்பினர் இடைமறித்து நகலெடுத்தது, வெளிநாடுகளுக்கு நேதாஜியின் உறவினர்கள் செல்லும் போது, அவர்களை புலனாய்வு அமைப்பினர் பின் தொடர்ந்து சென்றது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply