பா.ஜ.க, தலைவர் அமித்ஷா, வரும் 6ம் தேதி மதுரைவருகிறார். 7ம் தேதி சென்னைக்கு, பிரதமர் மோடி வருகிறார்,'' என, தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

தமிழக பா.ஜ.க, தலைமை அலுவலகமான கமலாலயத்தில்,செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; மதுவிலக்கு அறிவிப்பை, வரும் 10ம் தேதிக்குள், தமிழக அரசு வெளியிடாவிட்டால், பா.ஜ., மிகப் பெரிய போராட்டம் நடத்தும். 'டாஸ்மாக்' வருமானத்துக்கு, மாற்றுவருமானம் குறித்து ஆலோசனைக்கு, அனைத்து கட்சி கூட்டம் நடத்தவேண்டும்.

தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களிடம் ஆலோசனை பெறவேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள்கட்சி தொண்டர்களிடம் மது குடிக்கக்கூடாது என, வலியுறுத்த வேண்டும். போதை மீட்புமுகாம் நடத்த பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. மது பழக்கத்திலிருந்து விடுதலையாக, அரசு மருத்துவ மனைகளில், போதை மீட்பு மறுவாழ்வு மையம் திறக்கவேண்டும்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர், வரும் 6ம்தேதி, மதுரையில் நடத்தும் கூட்டத்தில், பா.ஜ.க, தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.இந்திய கைத்தறிதினம் அறிவிக்கும் விழா, 7ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் பிரதமர் , கைத்தறி தினத்தை அறிவிக்கிறார். தமிழகத்தில் பாரம்பரியமாக கைத்தறி விற்பன்னர்கள் இருக்கின்றனர் என்பதால், தமிழகத்தை தேர்வுசெய்தார்.இவ்வாறு, தமிழிசை கூறினார்.

Leave a Reply