திருச்சியில்  60–க்கும் அதிகமான பேனர்களில் நரேந்திர மோடியின்  படம்  கிழிப்பு திருச்சியில் நரேந்திர மோடியை வரவேற்க வைக்கப்பட்டிருந்த 60–க்கும் அதிகமான பேனர்களில் நரேந்திர மோடியின் படத்தை சகிப்புத்தன்மை அற்ற பைத்தியக்கார கூட்டம் கிழித்துள்ளது.

திருச்சிமாநாட்டில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் மூலமும், ஆன்லைன் மூலமும் பெயர் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஆன்லைனில் 30 ஆயிரம்பேர் முன்பதிவு செய்துள்ளார்கள். விண்ணப்பங்கள் மூலம் பெயர்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளது. மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் ரூ.10 நுழைவு கட்டணம் செலுத்தவேண்டும்.

திருச்சியில் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையில் நேற்று இரவு நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த 50–க்கும் மேற்பட்ட பிரமாண்டபேனர்களில் மோடியின் படத்தை கிழித்துள்ளனர்.

இன்று காலை அதைபார்த்ததும் பா.ஜனதாவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக பா.ஜ.க வினர் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தசம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Reply