மத்திய அரசு, தன்தோல்விகளையும், செயலற்ற தன்மையையும் மறைக்க, எதிர் கட்சிகளின் மீது, தேவையற்ற விசாரணை களை ஏவி விடுகிறது என்று ம.பி., மாநில முதல்வர், சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்

இந்த வருட இறுதியில், மத்திய பிரதேசத்தில், சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது . அம்மாநிலத்தை ஆளும், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த, முதல்வர், சிவராஜ்சிங் சவுகான், ஏற்கனவே, இருமுறை வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தலைநகர் போபாலில் நடந்த தேர்தல், பிரசாரகூட்டத்தில், சவுகான் பேசியதாவது: மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, பலவிதங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. தனது தோல்விகளையும், செயலற்ற தன்மையையும் மறைக்க, எதிர்க் கட்சிகளின் மீது, தேவையற்ற விசாரணைகளை, சிபிஐ., போன்ற அமைப்புகளின் மூலம் ஏவி விடுகிறது.

மத்தியில், 60 ஆண்டுகள் ஆட்சிசெய்த காங்கிரஸ் மேற்கொள்ளமுடியாத திட்டங்கள் பலவற்றை, கடந்த, ஒன்பதாண்டுகளில், என் தலைமையிலான, பா.ஜ.க, அரசு மேற்கொண்டுள்ளது. விவசாயத்தைமேம்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால், விவசாய உற்பத்தியில், நாட்டில் முன்னணிமாநிலமாக விளங்குகிறது. என்று முதல்வர் சவுகான் கூறினார்

Leave a Reply