ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே புத்தூ­ரில் பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்­டனர். இவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இதில் தமிழக போலீ­சார் 2 பேர் ­கா­ய­முற்­ற­னர். தொடர்ந்து 12 மணி நேரம் ­ந­டந்­த ­போ­ராட்­டத்த்­திற்­கு ­பின்­னர் ம­தி­யம் 2 ம­­ணி­ய­ள­வில் ­ஒ­ரு ­பெண்­ணும், 3 கு­ழந்­தை­க­ளும் ­பத்­தி­ர­மா­க ­உ­யி­ரு­டன் ­மீட்கப்பட்டனர்.

சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு படை தேடி வந்தது. இந்த நிலையில் சென்னை பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் போலீசார் சோதனையிட்டபோது தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டான். அவன் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திரா மாநிலம் புத்தூரில் உள்ள ஒரு வீட்டை தமிழக – ஆந்திர போலீஸ் படை இன்று அதிகாலை சுற்றி வளைத்தது.

அப்போது தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் அங்கு குடும்பத்துடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் வியாபாரிகள் போல் அங்கு 6 மாதமாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். அவர்களுடன் பெண்களும் இருந்தனர்.

போலீசார் முன் எச்சரிக்கையாக அந்த பகுதியில் வசித்த மக்களை வெளியேற்றினார்கள். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த தெரு உள்ளிட்ட 4 தெருக்கள் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு அதிகாலை 4 மணிக்கு தமிழக இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆகியோர் துப்பாக்கியுடன் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர்.

போலீசை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தீவிரவாதிகள் அரிவாளால் வெட்டினார்கள். போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒருபுறம் துப்பாக்கி சண்டை நடந்தாலும், தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க காவல்துறை தீவிர முயற்சி செய்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரையில் துளையிட்டு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், உடனடியாக வெடிக்கச் செய்து அப்பகுதியை தரைமட்டமாக்கிவிடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. எனவே, வெடிகுண்டு நிபுணர்கள் நிலைமையை கவனமாக கையாண்டனர்.

அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சண்டை பிற்பகல் வரை நீடித்தது. அதன்பின்னர் சுமார் 2 மணியளவில் தீவிரவாதிகளுடன் தங்கியிருந்த ஒரு பெண், 3 குழந்தைகள் மீட்கப்பட்டதை டி.ஜி.பி. நரேந்திர பால் சிங் உறுதி செய்தார். ஆனால், பாதுகாப்பு கருதி அவர்களை காவல்துறை அடையாளம் காட்டவில்லை.

இதற்கிடையே பேச்சுவார்த்தைக்குப் பின்னர், வீட்டினுள் பதுங்கியிருந்த பிலால், பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

போலீசாரிடம் சரணடைந்த பயங்கரவாதி பன்னா இஸ்மாயில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் . போலீசாருடன் நடந்த சண்டையில் வயிற்றில் பாய்ந்த குண்டை அகற்ற இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 ஜெலட்டின் குச்சிகள், 3 வெடிகுண்டுகள் மற்றும் குண்டு தயாரிக்கும் பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சரணடைந்த பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிலால் மாலிக் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவன் ஆவான். மைனராக இருந்த நேரத்தில் இவனது மீதான குற்றம் தனியாக விசாரிக்கப்பட்டது. அவ்வப்போது கைது ஆவதும் பின்னர் ஜாமினில் வெளியே வருவதும், சில வருடங்களாக தலைமறைவாவதும் இவனுக்கு வாடிக்கை. நீண்ட காலமாக போலீசாருக்கு பெரும் சவாலாகவே இவனது நடவடிக்கை இருந்து வந்தது. இன்றைய பிலால் கைது போலீசாருக்கு பல்வேறு வழக்குகளை துரிதப்படுத்த துணையாக இருக்கும் ..

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.