நவராத்திரி அரக்கன் மகிஷாசுரனுக்கு மட்டும் அல்ல , அப்பாவி மக்களை கொன்று குவித்த தற்கால தீவிரவாத அரக்கர்கள் போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் போன்றோருக்கும் அஸ்த்தமன நாளாகவே அமைந்து விட்டது.

கடந்த, 2011ல், ஊழலுக்கு எதிராக, பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்ட விழிப்புணர்வு யாத்திரையில் பைப்' வெடிகுண்டுகளை வைத்து அத்வானியை கொலைசெய்ய முயன்ற, சேலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் இந்துமுன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், பாஜக. பிரமுகர் அரவிந்த்ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொலைசெய்த வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோரை காவல்துறையினர் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து கைது செய்து என்ன பயன்?. ஓட்டுப் பொறுக்கி போலி மதவாத அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கும் தைரியத்தில், அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை அனாவசியமா டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு நம்ம உள்துறை அமைச்சர் ஐயா ஷிண்டே எல்லா மாநிலத்துக்கும் போட்ட கடுதாசி இருக்கும் தைரியத்தில் உள்ளே இருந்து கொண்டே இனி யார் உயிரை எடுக்கலாம் என்று திட்டம் போட அல்லவா ஆரம்பித்து விடுவார்கள்?

இன்று நேற்று அல்ல கடந்த இருபது வருடங்களாகவே இதே நிலைதான், இதில் நாம் இழந்த இயக்க சகோதரர்களின் எண்ணிக்கை மட்டும் நூறைத் தாண்டும். ஆனால் இவைகள் அனைத்தும் தனிப்பட்ட விரோதம் என்று தாவிக்குதிக்கும் மதவாத இயக்கங்களும், அவர்களுக்கு காவடி தூக்கும் கம்யூனிஸ்ட்களும், திராவிட கழகங்களும் , திருமாக்களும் , சம்மந்தப்பட்ட தீவிரவாதிகள் பிடிபடும்போது மட்டும் மன்மோகன் சிங்கை விட மௌனமாக மாறிவிடுகின்றனர். மதவாத இயக்கங்களோ எங்கே தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளி விடுவார்களோ என பதறியடித்து நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்து தாங்கள் வேறு அவர்கள் வேறல்ல என்ற தொனியில் நடந்தும் கொள்கின்றனர்.

(ஜே. அப்துல் ரஹிம், இந்திய தேசிய லீக் கட்சியின் பொது செயலாளர் [The petitioner J. Abdul Rahim, general secretary, Indian National League Party], ஆள்கொணர்வு மனு ஒன்றை அக்டோபர் 4 அன்று தாக்குதல் செய்துள்ளார். "பக்ருதீன் எனது நண்பர். செய்திகள் வாயிலாக அவரை போலீஸார் கைது செய்து, ஏதோ மறைவிடத்திற்கு விசாரிக்க எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது. போலீசார் அவரது குடும்பதிற்கு இவ்விவரங்களை சொல்லவில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது. உடனே அவரை விடுவிக்கவேண்டும்", என்று வாதித்துள்ளார்)

எங்கேயோ இருக்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட ஒரு மாபெரும் தீவிரவாத கூட்டத்தையே தங்களுக்கு எந்த ஒரு உயிர்சேதமும் இன்றி கூண்டோடு கொன்று குவித்தது , ஆனால் இங்கேயோ தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க காவல்துறையினர் தங்கள் உயிரை விடவேண்டிய நிலைதான் உள்ளது. ஒரு சக இந்தியனின், ஒரு காவல்துறையின், ஒரு இராணுவ வீரனின் உயிருக்கு இல்லாத மதிப்பு குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கு இருப்பதாகவே தோன்றுகிறது.

அப்படியே தப்பித்தவறி தீவிரவாதிகளின் மேல் குண்டுப்பட்டு அவர்கள் இறந்துவிட்டால் அவ்வளவுதான் அது போலி என்கவுன்டராகி விடும். தீவிரவாதிகளின் தாக்குதலில் இறக்கும் இராணுவத்துக்காக , பலநூறு அப்பவிகளுக்காக வராத கோபம் காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்து மதச் சார்பற்ற கட்சிகளுக்கு வந்துவிடும் . அப்புறம் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்ட அதிகாரிகள் வரை அனைவரும் கம்பி எண்ண வேண்டியதுதான். இவைகள் அனைத்தும் குஜராத்தில் கண்கூடு.

இந்திரா காந்திக்காக பல்லாயிரம் அப்பாவி சீக்கியர்களை பலிகொடுத்த காங்கிரஸ் , ராஜீவ் காந்திக்காக பல லட்சம் அப்பாவி இலங்கை தமிழர்களை பலிக்கொடுத்த காங்கிரஸ். பல்லாயிரம் மக்களை ஒரு சில குண்டுகளில் தீர்த்துக்கட்ட துடிக்கும் தீவிரவாதிகளை தீர்த்துக்கட்டினால் அதை போலி என்கிறது. அனைத்து பிரச்சனைகளுக்கான வேர் இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகிறது. முதலில் களையெடுக்க படவேண்டியது தீவிரவாதிகளையல்ல , அவர்கள் இந்த சமூகத்தில் செழிப்பாக வளர வாய்ப்பு தந்த இந்த காங்கிரஸ் போன்ற கட்சிகளைத்தான். இவர்கள் (காங்கிரஸ்) என்றைக்கோ களையெடுக்க பட்டிருந்தால் இந்த போலீஸ்' பக்ருதீன்களும் , பிலால் மாலிக்களும், பன்னா இஸ்மாயில்களும் இன்றும் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில்தான் இடம்பிடித்திருப்பார்கள். தாங்கள் செய்த கொலைகளுக்கா அல்ல! தாங்கள் செய்த சாதனைகளுக்காக!!.

தமிழ் தாமரை ; VM. வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.