நாடு முழுவதும் உள்ள 62 சுங்க சாவடிகளில் கட்டணவசூல் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 2 சுங்க சாவடிகளும் அடக்கமாகும்.

50 கோடி ரூபாய்க்கு குறைவான செலவில் மேம்படுத்தப் பட்ட சாலைகளில், சுங்கச்சாவடிகள் இருக்காது என்று மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதனிடையே நாகப்பட்டினம் -& மைசூரு தேசிய நெடுஞ் சாலையில் தென்னிலை, பொங்கலூர் ஆகிய இரு இடங்களில், கடந்தமாதம் புதிதாக சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதற்கு எழுந்த பொது மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு அந்த 2 சாவடிகளிலும் கட்டணம்வசூலிக்கும் முடிவை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்துசெய்துள்ளது.

Leave a Reply