இந்தியாவின் இரும்புமனிதரான, சர்தார் வல்லபாய்படேல் பின்பற்றியது உண்மையான மதச்சார்பின்மை தான்,நாட்டுமக்களையும், நாட்டையும், மதத்தின்பெயரால் துண்டாடும் வகையிலான, மதச் சார்பின்மையை, படேல் பின்பற்றவில்லை . தற்போது நாட்டுக்குதேவை. ஓட்டுவங்கி அரசியலுடன் தொடர்புடைய, மதச்சார்பின்மை தேவையில்லை,” என, பாஜக ., பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி பேசியுள்ளார்

நாட்டின் முதல் உள்துறையமைச்சர், இந்தியாவின் இரும்புமனிதர், சர்தார் வல்லபாய் படேலுக்கு, உலகிலேயே மிக உயரமான 182 மீட்டர் உயர இரும்புச் சிலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில், மோடி இவ்வாறு பேசினார்.

நம்நாடு, சுதந்திரம் அடைந்தபின், மாகாணங்களை ஒருங்கிணைப்பதில், முக்கியபங்கு வகித்தவர், சர்தார் வல்லபாய் படேல். ‘இந்தியாவின் இரும்புமனிதர்’ என, புகழப்படும் படேல், நாட்டின், முதல் உள்துறை அமைச்சராக பதவிவகித்த, பெருமைக்குரியவர். குஜராத் மாநிலத்தைசேர்ந்த படேலுக்கு, உலகிலேயே, மிகஉயரமான சிலையை அமைக்க, குஜராத் முதல்வரும், பாஜக .,வின் பிரதமர் வேட்பாளருமான, நரேந்திரமோடி திட்டமிட்டார். குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில், நர்மதை ஆற்றின்நடுவில் அமைந்துள்ள தீவுபோன்ற பகுதியில், இந்த பிரமாண்ட சிலையை அமைக்க, திட்டமிடப்பட்டுள்ளது. சர்தார் படேலின் பிறந்த நாளானநேற்று, இந்த சிலைக்கான பூமிபூஜை நடந்தது.

நாடுமுழுவதும் உள்ள, விவசாயிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து, இரும்புதுண்டுகளை பெற்று, இந்த சிலையை அமைக்க போவதாக, நரேந்திரமோடி, சபதம்செய்து உள்ளார்.

இந்நிலையில் அடிக்கல் நாட்டுவிழாவில், மோடி பேசியதாவது: சிலநாட்களுக்கு முன், ‘சர்தார் படேல், உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றியவர்’ என, பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். நாங்களும், அதைத்தான், கூறுகிறோம். சர்தார்படேல், உண்மையான மத சார்பின்மையை பின்பற்றியவர்தான். அதில், யாருக்கும் சந்தேகம் இல்லை.

ஆனால், அவர், ஓட்டுவங்கி அரசியலுடன், தொடர்புடைய மத சார்பின்மையை பின்பற்றவில்லை. நாட்டுமக்களையும், நாட்டையும், மதத்தின்பெயரால் துண்டாடும் வகையிலான, மதச் சார்பின்மையை, படேல் பின்பற்றவில்லை. நாட்டையும், அனைத்து மதமக்களையும் ஒருங்கிணைக்கும் விதமான, மத சார்பின்மையை பின்பற்றினார். சர்தார்படேல், அனைவருக்கும் பொதுவானவர். ஏதாவது ஒருஅரசியல் கட்சியுடனும், அவரை தொடர்புபடுத்தி கூறுவது, அவருக்கு இழைக்கப்படும் அநீதி. அவரின் சேவை, இந்திய சரித்திரத்துடன் தொடர்புடையது.

ராணா பிரதாப், சத்ரபதிசிவாஜி, பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு போன்றவர்கள், மிகவும், போற்றுதலுக்குரிய, வீரபுருஷர்கள். அவர்கள் என்ன, பாஜ.,வைச் சேர்ந்தவர்களா? இந்தநாட்டுக்காக, அர்ப்பணித்துகொண்ட அனைவரையும், பாஜக., மதிக்கும். இந்நாட்டை ஒருங்கிணைப்பதில், சாணக்கியருக்கு அடுத்ததாக, மிகவும்பாடுபட்டவர், சர்தார் படேல்தான். இது, வாய்பேச்சு அல்ல; வரலாறு. ஆனால், இந்தநாட்டை, பல ஆண்டுகளாக ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சியினர், வரலாற்றில், அவருக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதற்கு முன்பும், சர்தார்படேலுக்கு, பிறந்த நாட்கள் வந்தன. அப்போதெல்லாம், மத்திய அரசுசார்பில், எந்த விளம்பரங்களையும், மத்திய அரசு செய்யவில்லை. ஆனால், இன்று, நாடுமுழுவதும் உள்ள பத்திரிகைகளில், விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மோடி பேசினார்
.

சர்தார் படேலின் சிலை

* சர்தார் படேலின் சிலை, உலகில் உள்ள சிலைகளிலேயே, மிகஉயரமான சிலையாகும், இதன் உயரம் 182 மீட்டர்.

* தற்போது, உலகின் மிகஉயரமான சிலையாக கருதப்படும், சீனாவில் உள்ள, புத்தர்சிலை, 153 மீட்டர் உயரமுடையது.

* சர்தார்படேல், நடந்துசெல்வது போன்ற தோற்றத்தில், இந்த சிலை, அமைக்கப்படவுள்ளது.

* இரும்பால் வடிவமைக்கப்பட்டாலும், சிலையின் புறத்தோற்றம், உயர்தர வெண்கலத்தில் அமைக்கப்படும்.

* சிலையை பார்ப்பதற்காக, அதன் உட்பகுதியில், உலகின் மிகஉயரமான, ‘லிப்ட்’ அமைக்கப்படவுள்ளது.

* சுற்றுலா பயணிகளும், பொது மக்களும், சிலையை அருகில்சென்று பார்ப்பதற்கும், சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இயற்கைவளங்களை ரசிப்பதற்கும், 200 பேர் நின்று பார்க்ககூடிய வகையிலான, கண்காணிப்பு கூண்டு அமைக்கப்படும்.

* நர்மதை ஆற்றில், 3.5 கிமீ., தூரம் படகில்பயணித்து தான், சிலை இருக்கும், தீவுக்கு செல்லமுடியும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.